சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 135வது கதைக்களம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) மாலை 4 மணிக்கு தேசிய நூலகத்தில் ‘இமேஜினேஷன்’ அறையில் நடைபெறுகிறது.
உள்ளூர் எழுத்தாளர்களின் படைப்புகளை விவரிக்கும் அங்கத்தில் முன்னோடி எழுத்தாளர் ஜே.எம்.சாலியின் படைப்புகள் குறித்து ராஃபிள்ஸ் கல்வி நிலைய மாணவர்கள் உரையாற்றவுள்ளனர்.
பேச்சாளர் மஹ்ஜபீன், முன்னோடி எழுத்தாளரின் படைப்புகள் குறித்துப் பகிர்ந்துகொள்ளவுள்ளார். மேலும், கதைக்களத்திற்கு வந்திருக்கும் போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடல் இடம்பெறுவதுடன், வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படும்.
அக்டோபர் மாதப் போட்டிகள்: நூல் அறிமுகப் போட்டிக்கு, சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் உள்ள சிறுகதை, குறுநாவல் அல்லது நாவல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் நயம்பட அறிமுகத்தை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த நான்கு நூலறிமுகங்களுக்கு ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன.
சிறுகதைப் போட்டிக்கான தொடக்க வரிகள்:
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 200லிருந்து 300 சொற்களுக்குள் சிறுகதை எழுத வேண்டும். ‘இது வீட்டிற்குத் தெரிந்தால் அவ்வளவுதான்... நினைக்கும்போதே மனம் பதறியது...’ என்பது தலைப்பு.
இளையர் பிரிவில் கலந்துகொள்வோர் 300லிருந்து 400 சொற்களுக்குள் எழுத வேண்டும். கொடுக்கப்படும் தலைப்பு, ‘இரவில் சரியான உறக்கம் இல்லை என்பதை அவனது சிவந்த கண்கள் காட்டிக்கொடுத்தன.’
பொதுப் பிரிவில் கலந்துகொள்வோர் 400 முதல் 500 சொற்களுக்குள் எழுத வேண்டும். ‘இப்படியொரு கேள்வி அவரிடமிருந்து வரும் எனக் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை’ என்பது தலைப்பு.
படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு https://forms.gle/VdpmyEfdVas5wtMLA என்ற மின்னியல் படிவத்தின் வழியாக அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் (செப்டம்பர் 26) அனுப்பிவைக்கவும்.
தொடர்புடைய செய்திகள்
அக்டோபர் மாதக் கதைக்களம் நிகழ்ச்சி, அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறும்.
மேல்விவரங்களுக்கு https://www.singaporetamilwriters.com/16 என்ற இணையப்பக்கத்துக்குச் செல்லலாம், அல்லது மணிமாலா மதியழகனை 8725 8701 என்ற எண்ணிலும் திருவாட்டி பிரேமா மகாலிங்கத்தை 9169 6996 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

