லிட்டில் இந்தியாவில் களைகட்டிய கடைசிநேரத் தீபாவளி விற்பனை: ஒரு புகைப்படத் தொகுப்பு

லிட்டில் இந்தியாவில் களைகட்டிய கடைசிநேரத் தீபாவளி விற்பனை: ஒரு புகைப்படத் தொகுப்பு

1 of 10
படம்: த.கவி
படம்: த.கவி
படம்: த.கவி
படம்: த.கவி
படம்: த.கவி
படம்: த.கவி
படம்: த.கவி
படம்: த.கவி
படம்: த.கவி
படம்: த.கவி

07 Nov 2026 - 7:01 pm

2 mins read

வாங்க விரும்பும் பொருள்களுக்கு விலைபேசும் உற்சாகக் குரல்கள், இனிப்புகள், பலகாரங்களின் நறுமணம், படபடவென வெடிக்கும் ‘பார்ட்டி பாப்பர்ஸ்’ ஒலி என லிட்டில் இந்தியா வட்டாரத்தில் கடைசிநேரத்தில் தீபாவளிக்குப் பொருள் வாங்கும் உற்சாகம் நிரம்பியிருக்கிறது.

தீபாவளிச் சிறப்பு விற்பனைக் கடைகளில் பொருள்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள்.
தீபாவளிச் சிறப்பு விற்பனைக் கடைகளில் பொருள்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள். - படம்: த.கவி

வீட்டில் விருந்து இல்லாத தீபாவளியை நினைத்துப் பார்க்க முடியுமா?

விருந்துக்கு உணவுப் பொருள்களை வாங்குவதற்காக ஈரச்சந்தையில் கூடியிருந்த பொதுமக்கள், ஈரமான தரையில் கவனத்துடன் நடந்தவாறே ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன் ஆகியவற்றின் தரத்தைப் பரிசோதித்து, தங்களுக்கு விருப்பமான வகையில் வெட்டித் தருமாறு வர்த்தகர்களிடம் கேட்டு வாங்கினர்.

இறைச்சிக் கடைகளில் வாடிக்கையாளர் விருப்பத்துக்கேற்ப இறைச்சிகளை வெட்டித் தரும் வர்த்தகர்கள்.
இறைச்சிக் கடைகளில் வாடிக்கையாளர் விருப்பத்துக்கேற்ப இறைச்சிகளை வெட்டித் தரும் வர்த்தகர்கள். - படம்: த.கவி
தரத்தைப் பரிசோதித்து விரும்பிய இறைச்சி வகையை வாங்கும் வாடிக்கையாளர்கள்.
தரத்தைப் பரிசோதித்து விரும்பிய இறைச்சி வகையை வாங்கும் வாடிக்கையாளர்கள். - படம்: த.கவி

தீபாவளி நாளில் வாழை இலையில் உணவு உண்ணும் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பங்களின் தேவையைப் பூர்த்தி செய்ய, மலேசியாவிலிருந்து 15,000க்கும் மேற்பட்ட வாழை இலைகளை இறக்குமதி செய்துள்ளதாக சாமிஸ் வாழை இலை கடையின் திரு பன்னீர்செல்வம், 64, கூறினார்.

தீபாவளி காலகட்டத்திற்காக மலேசியாவிலிருந்து 15,000க்கும் மேற்பட்ட வாழை இலைகளை இறக்குமதி செய்துள்ளதாகக் கூறினார் சாமிஸ் வாழை இலை கடையின் திரு பன்னீர்செல்வம், 64.
தீபாவளி காலகட்டத்திற்காக மலேசியாவிலிருந்து 15,000க்கும் மேற்பட்ட வாழை இலைகளை இறக்குமதி செய்துள்ளதாகக் கூறினார் சாமிஸ் வாழை இலை கடையின் திரு பன்னீர்செல்வம், 64. - படம்: த.கவி
தீபாவளி விருந்தில் வாழை இலைக்கு முக்கிய இடமுண்டு.
தீபாவளி விருந்தில் வாழை இலைக்கு முக்கிய இடமுண்டு. - படம்: த.கவி

தீபாவளி வழிபாடுகளில் பூக்களும் இனிப்புகளும் படைக்கப்படும் என்பதால், கடைக்காரர்கள் சரக்குகளை உடனுக்குடன் நிரப்பியதோடு, மின்னல் வேகத்தில் பூமாலைகளையும் தொடுத்துக் கொண்டிருந்தனர்.

வாடிக்கையாளர்களுக்காக வண்ணப் பூமாலைகளைத் தொடுத்து வைத்துக் காத்திருக்கும் கடைக்காரர்கள்.
வாடிக்கையாளர்களுக்காக வண்ணப் பூமாலைகளைத் தொடுத்து வைத்துக் காத்திருக்கும் கடைக்காரர்கள். - படம்: த.கவி

பலகாரக் கடைகளில் தின்பண்டங்களைச் சுவைத்துப் பார்த்து வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்றனர்.

கடைசிநேரத்தில் வாங்க வருவோர்க்காகத் தயாராக அடுக்கப்பட்டிருக்கும் இனிப்பு வகைகள்.
கடைசிநேரத்தில் வாங்க வருவோர்க்காகத் தயாராக அடுக்கப்பட்டிருக்கும் இனிப்பு வகைகள். - படம்: த.கவி
பண்டிகை மகிழ்ச்சியை அதிகரிக்கும் விதவிதமான  இனிப்பு வகைகள்.
பண்டிகை மகிழ்ச்சியை அதிகரிக்கும் விதவிதமான இனிப்பு வகைகள். - படம்: த.கவி

கேம்பல் லேன், பர்ச் ரோடு கடைவீதிகளில் நிலவிய கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் மக்கள் பண்டிகைத் தோரணங்களை உற்சாகமாக வாங்கினர்.

தீபாவளிக்கு வீட்டை அலங்கரிக்கும் பொருள்களை வாங்குவோர்.
தீபாவளிக்கு வீட்டை அலங்கரிக்கும் பொருள்களை வாங்குவோர். - படம்: த.கவி
ஏற்கெனவே வரையப்பட்ட இந்த வடிவங்களை வாசலில் ஒட்டினால் போதும், வண்ணக் கோலம் வரவேற்கத் தயார்!
ஏற்கெனவே வரையப்பட்ட இந்த வடிவங்களை வாசலில் ஒட்டினால் போதும், வண்ணக் கோலம் வரவேற்கத் தயார்! - படம்: த.கவி

பட்டாசுகளையும் ‘பார்ட்டி பாப்பர்’களையும் எத்தனை வாங்குவது என்பது குறித்து பெற்றோரிடம் குழந்தைகள் செல்லமாக அடம்பிடித்த வேளையில், தள்ளுபடிப் பலகைகள் மக்களைப் பாரம்பரிய ஆடைகளை நோக்கி ஈர்த்தன.

பண்டிகைக் காலங்களில் பாரம்பரிய ஆடைகளைப் பலரும் விரும்பி வாங்குவது வழக்கம்.
பண்டிகைக் காலங்களில் பாரம்பரிய ஆடைகளைப் பலரும் விரும்பி வாங்குவது வழக்கம். - படம்: த.கவி
வாடிக்கையாளருக்குக் கொடுத்த வாக்குப்படி குறித்த நேரத்தில் ஆடையைத் தைத்துத் தர முனைந்துள்ள தையற்காரர்.
வாடிக்கையாளருக்குக் கொடுத்த வாக்குப்படி குறித்த நேரத்தில் ஆடையைத் தைத்துத் தர முனைந்துள்ள தையற்காரர். - படம்: த.கவி

வாடிக்கையாளர்களின் ஆடைகளைக் குறித்த நேரத்தில் தைத்துக் கொடுப்பதற்காகத் தையல்காரர்கள் தையல் இயந்திரங்களை விட்டு அகலாமல் தீவிரமாக வேலை செய்தனர்.

வாடிக்கையாளருக்குக் கொடுத்த வாக்குப்படி குறித்த நேரத்தில் ஆடையைத் தைத்துத் தர முனைந்துள்ள தையற்காரர்.
வாடிக்கையாளருக்குக் கொடுத்த வாக்குப்படி குறித்த நேரத்தில் ஆடையைத் தைத்துத் தர முனைந்துள்ள தையற்காரர். - படம்: த.கவி

சிறுமியர், இளம்பெண்கள், முதியவர்கள் என்ற பேதமின்றி, நளினமாக வடிவங்களை வரையும் மருதாணிக் கலைஞர்கள்முன் வீற்றிருக்க, அவர்களுடன் வந்த ஆண்கள் பொறுமையுடன் காத்திருந்தனர்.

மருதாணி அலங்காரத்துக்கு வயது ஒரு பொருட்டன்று.
மருதாணி அலங்காரத்துக்கு வயது ஒரு பொருட்டன்று. - படம்: த.கவி

விலைவாசி உயர்வு, இணையவழி வணிகம், தீபாவளிச் சந்தைக் கடைகள் போன்ற காரணங்களால் கடந்த ஆண்டுகளைவிட இம்முறை கூட்டம் சற்றுக் குறைவாகவே காணப்பட்டது.

கடந்த ஆண்டுகளைவிட லிட்டில் இந்தியாவில் இம்முறை, தீபாவளிக்குக் கடைசி நேரத்தில் பொருள்வாங்குவோர் கூட்டம் சற்றுக் குறைவாகவே காணப்பட்டது.
கடந்த ஆண்டுகளைவிட லிட்டில் இந்தியாவில் இம்முறை, தீபாவளிக்குக் கடைசி நேரத்தில் பொருள்வாங்குவோர் கூட்டம் சற்றுக் குறைவாகவே காணப்பட்டது. - படம்: த.கவி

இருப்பினும், பண்டிகைக்கு முந்தைய இரண்டு நாள்களில் லிட்டில் இந்தியாவிற்குச் சென்று, வண்ண விளக்குகளைக் கண்டு ரசித்து, வீதிகளில் எதிர்ப்படும் உற்றார்-உறவினர்களைக் கண்டு, “இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்,” என வாழ்த்தி மகிழும் சிங்கப்பூரர்களின் வழக்கம் இப்போதும் தொடர்கிறது. பலருக்குப் பண்டிகை மகிழ்ச்சி தொடங்குவதே இங்குதான்!

குறிப்புச் சொற்கள்