பொங்கல் திருவிழாவையொட்டி இலக்கியப் பட்டிமன்றம்

1 mins read
115a0547-4cf1-473c-a7ae-dca1f1b40e6e
ஜனவரி 7ஆம் தேதி நடந்த பட்டிமன்றத்தில் சிங்கப்பூரையும் இந்தியாவையும் சேர்ந்த ஆறு பேச்சாளர்கள் விவாதித்தனர். - படம்: தப்லா

பொங்கல் திருவிழாவையொட்டி லிஷா இலக்கிய மன்றம் சிறப்பு இலக்கியப் பட்டிமன்றத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

பட்டிமன்றத்தின் நடுவராக நாவுக்கரசர் நாஞ்சில் சம்பத் பொறுப்பேற்று ‘இன்பத்தமிழ் இலக்கியங்கள் படித்து மகிழவே படித்து வாழவே’ என்ற தலைப்பில் நடத்த இருக்கிறார்.

‘படித்து வாழவே’ என்ற அணியில் முனைவர் இரத்தின வேங்கடேசன் தலைமையில் திருமதி கங்காவும் திரு அர்ஜுன் நாராயணனும், ‘படிந்து வாழவே’ என்ற அணியில் திரு கண்ணன் சேஷாத்ரி தலைமையில் திருமதி இசக்கி செல்வியும் திரு ‘பரவாக்கோட்டை’ அண்ணாவும் வாதாட இருக்கின்றனர்.

நல்லதொரு இலக்கியத்தை கேட்டு மகிழவும் உணர்ந்து நடக்கவும் வழிநடத்தும் பட்டிமன்றம் சனிக்கிழமை (ஜனவரி 18) காலை 10 மணிக்கு சிராங்கூன் சாலையில் உள்ள வீரமாகாளியம்மன் ஆலய திருமண அரங்கில் (இரண்டாம் தளம்) நடைபெற இருக்கிறது. பட்டிமன்ற ஆர்வலர்கள், இலக்கிய கலைஞர்கள் அனைவரும் வரலாம். அனுமதி இலவசம்.

குறிப்புச் சொற்கள்