சொல்லாடும் முன்றிலில் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா

சொல்லாடும் முன்றிலில் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா

1 mins read
d2151653-16a7-4ccc-bdeb-bcc38d01ac69
சொல்லாடும் முன்றில் அமைப்பின் மூன்றாம் ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார் கார்த்திக் நேத்தா. - படம்: சொல்லாடும் முன்றில்
multi-img1 of 2

திரைத் திரையலகின் முன்னணிப் பாடலாசிரியர்களில் ஒருவராகத் திகழும் கார்த்திக் நேத்தாவை நேரில் கண்டு கலந்துரையாடும் வாய்ப்பு சிங்கப்பூர்வாசிகளுக்குக் கிடைக்கவிருக்கிறது.

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய அமைப்புகளில் ஒன்றான சொல்லாடும் முன்றிலின் மூன்றாவது ஆண்டுவிழா செப்டம்பர் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குத் தேசிய நூலகக் கட்டடத்தின் 16ஆம் தளத்திலுள்ள ‘த பாட்’ அரங்கில் நடைபெறுகிறது.

அந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகத் திரு கார்த்திக் நேத்தா கலந்துகொள்கிறார்.

காதலே காதலே (96), போறானே போறானே (வாகை சூட வா), அஞ்சுவண்ணப் பூவே (தக்லைஃப்), இதுவும் கடந்து போகும் (நெற்றிக்கண்) உள்ளிட்ட ஏராளமான திரைப்பாடல்கள் இவரது எண்ணத்திலும் எழுத்திலும் தோன்றியவை.

நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். தொடர்புக்கு: நீதிப்பாண்டி - 8237 7006

குறிப்புச் சொற்கள்