பட இயக்குநர் மில்லத் அகமத்தின் கைவண்ணத்தில் உருவான ‘மீலாதுன் நபி’ ஆவணப்படம் பினாங்கு, பிஜிஆர்எம் இயக்க மண்டபத்தில் அக்டோபர் 25ஆம் தேதி திரையிடப்பட்டது.
இஸ்லாமியப் புனித நூல்களான திருக்குர்ஆன், ‘ஹதீஸ்’ ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ‘மீலாதுன் நபி’ ஆவணப்படத்தின் பதாகையை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கே கே சிஹாபுதீன் அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.
தொடர்ந்து படத்தின் இயக்குநர் மில்லத் அகமதைப் பாராட்டி பொன்னாடை போர்த்திக் கேடயம் வழங்கினார்.
ஏறக்குறைய 300 பேர் பங்கேற்ற நிகழ்ச்சியில், பினாங்குப் பாடகர்கள் நூருல் ஹக், அஃப்ரோஸ், அஃப்ரின் சகோதரிகள், ரசிதா பேகம் ஆகியோரின் இஸ்லாமிய இசைக்கச்சேரி நடந்தேறியது.
