சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், இந்த ஆண்டு வழக்கம்போல் தமிழ் மொழி விழாவின் ஒரு பகுதியாக வரும் ஏப்ரலில் முத்தமிழ் விழாவை நடத்தவிருக்கிறது. முத்தமிழ் விழாவையொட்டி சிறுகதைப் போட்டியும் நடத்தப்படும். பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இளையர்களுக்கும் ஒரு பிரிவாகவும் பொதுமக்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டி நடத்தப்படும்.
மேலும், ஓர் சிறந்த அறிவியல் கதைக்கும் ஒரு சிறந்த வரலாற்றுக் கதைக்கும் தனியாகப் பரிசுகள் வழங்கப்படும். அனைத்துப் போட்டிகளுக்கும் படைப்புகள் வந்துசேர வேண்டிய இறுதி நாள்: 16.03.2025.
சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவர்களும் நிரந்தரவாசிகளும் மட்டுமே அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்கலாம். மேல்விவரங்களுக்கு www.singaporetamilwriters.com இணையத்தளத்தை அல்லது துணைத் தலைவர் முத்துமாணிக்கத்தை (9675 3215) அல்லது உதவித் தலைவர் அன்புச்செல்வனை (9850 7271) தொடர்புகொள்ளலாம்.

