உதவி தேவைப்படுவோருக்கான புதிய திட்டம் அறிவிப்பு

1 mins read
636f56fe-ad94-4418-a313-eac674a7a5d2
படம்: - ஃபூட் ஃபிரம் த ஹார்ட்

தேசிய தொண்டூழியம், அறக்கொடை நிலையம், ‘தி கிரேட் சிங்கப்பூர் கிவ்’ எனும் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. 2025ல் ‘எஸ்ஜி 60’ எனும் சிங்கப்பூரின் 60வது தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட இந்த நான்கு மாதத் திட்டம், சிங்கப்பூரர்கள் பிறருக்கு உதவ ஊக்கமளிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது.

giving.sg இணையத்தளத்தில் ‘எல்லோராலும் அளிக்க முடியும்’ என்ற பிரிவின்கீழ் சிங்கப்பூரர்கள் வெவ்வேறு பயனாளிகளுக்குத் தங்களால் இயன்றதைத் தந்து ஆதரவளிக்கலாம்.

‘நம் சிங்கப்பூரை ஒன்றாக உருவாக்கலாம்’ என்பது ‘எஸ்ஜி 60’ன் கருப்பொருள். அந்தக் கருப்பொருளுக்கேற்ப இத்திட்டம், உதவி தேவைப்படுவோருக்குச் சிங்கப்பூரர்கள் கைகோத்து உதவ ஆர்வம் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தை இலக்காகக் கொண்டுள்ளது.

இத்திட்டம் செயல்படும் அதே நேரத்தில் ‘எஸ்ஜி பரிவு’ இயக்கமும் நடைபெறும். நன்கொடை அமைப்புகள், நிறுவனங்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பங்காளிகள் இந்த உன்னத நோக்கத்திற்கு உதவ முன்வருவார்கள்.

‘எஸ்ஜி பரிவு’ இயக்கத்தில் அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினக் கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். 2025 பிப்ரவரி 28ஆம் தேதி வரை ‘தி கிரேட் சிங்கப்பூர் கிவ்’ திட்டம் இடம்பெறும்.

ஆண்டுதோறும் நிகழும் ‘எஸ்ஜி பரிவு’ இயக்கம் டிசம்பர் 1லிருந்து 7ஆம் தேதி வரை செயல்படும்.

இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு http://www.giving.sg/greatsingaporegive எனும் இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்