சிங்கப்பூரில் ஆண்டுதோறும் இடம்பெறும் தமிழ்மொழி விழா, இவ்வாண்டு ‘இளமை’ என்ற கருப்பொருளுடன் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருக்கிறது.
அதனை முன்னிட்டு, லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம், கலை, இலக்கியம், விளையாட்டு, தலைமைத்துவம் முதலிய துறைகளில் சிறந்து விளங்கி, சாதனை படைத்துள்ள இளையர்களைச் சிறப்பிக்கவுள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள லிட்டில் இந்தியாவின் சிராங்கூன் சாலையின் இருபுறமும் உள்ள தூண்களில் சாதனை இளையர்களின் படங்களுடன், அவர்களின் சாதனைகளை வெளிப்படுத்தும் பதாகைகளைத் தொங்கவிடும் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
சிங்கப்பூரின் 60வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மொத்தம் 60 பதாகைகள் தொங்கவிடப்படும்.
இதற்குத் தகுதிபெறும் இளையர்களை முன்மொழியுமாறு அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், தமிழ் அமைப்புகள் ஆகியவற்றை லிஷா கேட்டுக்கொண்டுள்ளது.
இளையர்கள் தங்களைத் தாங்களே முன்மொழியலாம்.
முன்மொழியப்படும் இளையர்கள் 39 வயதிற்கு உட்பட்டவராகவும் சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசியாகவும் இருக்க வேண்டும் .
முன்மொழிவுப் படிவங்களை https://bit.ly/lisha2025 எனும் இணைய முகவரி வழியாகச் சமர்ப்பிக்கலாம். படிவங்களைச் சமர்ப்பிக்க இறுதி நாள் மார்ச் 7ஆம் தேதி.
தொடர்புடைய செய்திகள்
லிஷா தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.
மேல்விவரங்களுக்கு திரு கண்ணன் சேஷாத்ரியை 93807092 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.