லிம்பாங் இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் லிம்பாங் சமூக மன்ற நிர்வாகக் குழுவும் நவம்பர் 9ஆம் தேதி ஏற்பாடு செய்த ‘தீபத் திருநாள்’ கொண்டாட்டத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி குடியிருப்பாளர்களுடன் இணைந்து தீபாவளியை அவர் கொண்டாடினார்.
இயூ டீ சமூக மன்றத்தில் நடைபெற்ற இக்கொண்டாட்டத்தில், உள்ளூர்க் கலைஞர்களின் மேடை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்த பிரதமர், வருகை தந்திருந்த இந்தியச் சமூகத்தினருடன் கலந்துறவாடிப் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.
நிகழ்ச்சியில் கலை, கலாசாரம் சார்ந்த கூடங்கள் இடம்பெற்றதோடு பயனாளிகளுக்கு ஆதரவளிக்க ரொக்கம் அடங்கிய உறைகளும் மளிகைப் பொருள்கள் நிறைந்த பைகளும் வழங்கப்பட்டன.

