கவிமாலை தலைவர் இன்பாவின் நூல்கள் வெளியீடு

கவிமாலை தலைவர் இன்பாவின் நூல்கள் வெளியீடு

1 mins read
aec5a8e3-48b6-477a-9a7d-c5fae3a0ea36
பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் நூல்கள் வெளியீட்டு விழா குறித்த விவரங்கள். - படம்: கவிமாலை

சிங்கப்பூரில் கவிதையின் சிறப்பை முன்னெடுத்து வரும் கவிமாலை அமைப்பின் சார்பில், கவிஞர் இன்பாவின் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சி பிப்ரவரி 22 (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு தேசிய நூலகத்தில் ‘தி பாட்’ அரங்கில் நடைபெறும்.

தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு இந்நிகழ்ச்சி ஒரு சிறப்பான சந்திப்பாக அமையும். சாகித்ய அகாடமி விருதுபெற்ற தமிழ், கன்னட மொழிபெயர்ப்பாளர் கே.நல்லம்பி இவ்விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கவுள்ளார்.

தமிழ் இலக்கிய உலகிற்குப் பல்வேறு சிறப்பான படைப்புகளை அளித்து, மண்சார் மொழியும் பண்பாட்டுச் சுவையும் கொண்ட வாழ்வியல் உணர்வுகளைக் கதைகளின் வழியாக வாசகர்களிடம் கொண்டுசேர்த்து வரும், இன்றைய தமிழ் இலக்கியத்தின் முக்கியக் கதை சொல்லிகளில் ஒருவரான எழுத்தாளர் பெருமாள் முருகன் சிறப்புரையாற்றுவார்.

மு.செ.பிரகாஷ், செவியின்ப சங்கீதா இருவரும் நூல்கள் தொடர்பான கருத்துரைகளை பகிர்ந்துகொள்வர்.

புதிய நூல்களின் வெளியீட்டையொட்டி படைப்புத்திறன், இலக்கியச் சிந்தனைகள் குறித்த பரிமாற்றங்களும் இடம்பெறும்.

தமிழ் இலக்கியத்தை நேசிப்பவர்கள், எழுத்தாளுமைகளைச் சந்திக்க இது நல்வாய்ப்பாக அமையும்.

இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள், தமிழ்மொழியை நேசிக்கும் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

குறிப்புச் சொற்கள்