கோலாகலமாகத் தொடங்கிய புரட்டாசி மாத அன்னதானம்

கோலாகலமாகத் தொடங்கிய புரட்டாசி மாத அன்னதானம்

படம்: சிவாயா

27 Sep 2026 - 3:25 pm

1 mins read

தமிழ் மாதங்களின் ஆறாம் மாதமான புரட்டாசி இவ்வாண்டு செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு புரட்டாசி மாத சனிக்கிழமையன்றும் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் நடைபெறும் அன்னதானத்திற்கான ஏற்பாடுகளையும் உணவுத் தயாரிப்புப் பணிகளையும் தமிழ் முரசு கண்டறிந்தது.

முதல் புரட்டாசி அன்னதானம் நிகழ்ந்த செப்டம்பர் 19ஆம் (சனிக்கிழமை) தேதிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு (வியாழக்கிழமை இரவு) பக்தர்கள் 1,000 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து உண்ணத் தேவையான மேசைகளும் நாற்காலிகளும் பிஜிபி மண்டபத்தின் தரைத் தளத்திலும் அதன் வளாகத்திலும் அமைக்கப்பட்டன.
முதல் புரட்டாசி அன்னதானம் நிகழ்ந்த செப்டம்பர் 19ஆம் (சனிக்கிழமை) தேதிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு (வியாழக்கிழமை இரவு) பக்தர்கள் 1,000 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து உண்ணத் தேவையான மேசைகளும் நாற்காலிகளும் பிஜிபி மண்டபத்தின் தரைத் தளத்திலும் அதன் வளாகத்திலும் அமைக்கப்பட்டன. - படம்: பே.கார்த்திகேயன்
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) பிற்பகல் இரண்டு மணி அளவில் தொடங்கிய காய்கறி வெட்டுதல் பணி இரவு 11 மணி வரை நீடித்தது.
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) பிற்பகல் இரண்டு மணி அளவில் தொடங்கிய காய்கறி வெட்டுதல் பணி இரவு 11 மணி வரை நீடித்தது. - படம்: பே.கார்த்திகேயன்
காய்கறி வெட்டுதல் பணியில் 100க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் வெவ்வேறு நேரங்களில் உதவினர். பூசணிக்காய், கேரட், வெள்ளறிக்காய் போன்ற பல்வேறு காய்கறிகளை அவர்கள் வெட்ட உதவினர்.
காய்கறி வெட்டுதல் பணியில் 100க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் வெவ்வேறு நேரங்களில் உதவினர். பூசணிக்காய், கேரட், வெள்ளறிக்காய் போன்ற பல்வேறு காய்கறிகளை அவர்கள் வெட்ட உதவினர். - படம்: பே.கார்த்திகேயன்
அயராது காய்கறி வெட்டிய தொண்டூழியர்கள் பசியறியாமல் இருக்க மற்றொரு தொண்டூழியர் குழு அவர்களுக்குத் தேவையான உணவையும் தின்பண்டங்களையும் தயாரித்தது. பக்தர்களுக்கு மட்டுமன்றி தொண்டூழியர்களுக்கும் அன்னதானம் முழுமையான அனுபவமாக அமைகிறது.
அயராது காய்கறி வெட்டிய தொண்டூழியர்கள் பசியறியாமல் இருக்க மற்றொரு தொண்டூழியர் குழு அவர்களுக்குத் தேவையான உணவையும் தின்பண்டங்களையும் தயாரித்தது. பக்தர்களுக்கு மட்டுமன்றி தொண்டூழியர்களுக்கும் அன்னதானம் முழுமையான அனுபவமாக அமைகிறது. - படம்: பே.கார்த்திகேயன்
இரவு 11 மணி அளவில் தலைமைச் சமையல் வல்லுநர் மனவளான் உரிய பூஜைகளைச் செய்து உணவு தயாரிப்புப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இரவு 11 மணி அளவில் தலைமைச் சமையல் வல்லுநர் மனவளான் உரிய பூஜைகளைச் செய்து உணவு தயாரிப்புப் பணிகளைத் தொடங்கி வைத்தார். - படம்: பே.கார்த்திகேயன்
ஏறக்குறைய 13,000 பக்தர்கள் உண்ணுவதற்குத் தேவையான உணவு இரவு முழுவதும் தயாரிக்கப்படுகிறது. இரவு 11 மணி அளவில் தொடங்கும் சமையல் காலை எட்டு மணி வரை நீடிக்கிறது. சாதம், சாம்பார், வடை, அப்பளம், காய்கறி வகைகள் எனப் பல்வேறு உணவு வகைகள் சமைக்கப்படுகின்றன.
ஏறக்குறைய 13,000 பக்தர்கள் உண்ணுவதற்குத் தேவையான உணவு இரவு முழுவதும் தயாரிக்கப்படுகிறது. இரவு 11 மணி அளவில் தொடங்கும் சமையல் காலை எட்டு மணி வரை நீடிக்கிறது. சாதம், சாம்பார், வடை, அப்பளம், காய்கறி வகைகள் எனப் பல்வேறு உணவு வகைகள் சமைக்கப்படுகின்றன. - படம்: பே.கார்த்திகேயன்
இரவு முழுவதும் தயாரிக்கப்படும் உணவு வகைகள் இயந்திரங்களின் உதவியுடன் பரிமாறப்படும் தளத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
இரவு முழுவதும் தயாரிக்கப்படும் உணவு வகைகள் இயந்திரங்களின் உதவியுடன் பரிமாறப்படும் தளத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றன. - படம்: பே.கார்த்திகேயன்
பலநூறு கிலோகிராம் எடையுள்ள காய்கறிகளும் சாப்பாட்டுப் பொருள்களும் அன்னதானத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
பலநூறு கிலோகிராம் எடையுள்ள காய்கறிகளும் சாப்பாட்டுப் பொருள்களும் அன்னதானத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. - படம்: பே.கார்த்திகேயன்
தரிசனத்திற்கும் அன்னதானத்திற்கும் வரும் அனைத்துப் பக்தர்களுக்கும் போதுமான அளவு சாதம் இருப்பதை தொண்டூழியர்கள் உறுதி செய்கின்றனர். மதிய உணவு மட்டுமன்றி காலை உணவும் பக்தர்களுக்காகத் தயார் செய்யப்படுகிறது.
தரிசனத்திற்கும் அன்னதானத்திற்கும் வரும் அனைத்துப் பக்தர்களுக்கும் போதுமான அளவு சாதம் இருப்பதை தொண்டூழியர்கள் உறுதி செய்கின்றனர். மதிய உணவு மட்டுமன்றி காலை உணவும் பக்தர்களுக்காகத் தயார் செய்யப்படுகிறது. - படம்: பே.கார்த்திகேயன்
சனிக்கிழமை காலை 11 மணியிலிருந்து பக்தர் கூட்டம் அன்னதானத்திற்காக அலைகடலெனத் திரளத் தொடங்கியது. பக்தர் கூட்டத்தைப் பாதுகாப்பான முறையில் அன்னதானத்திற்கு வழிநடத்த குறிப்பிட்ட தொண்டூழியர்கள் நியமிக்கப்பட்டனர்.
சனிக்கிழமை காலை 11 மணியிலிருந்து பக்தர் கூட்டம் அன்னதானத்திற்காக அலைகடலெனத் திரளத் தொடங்கியது. பக்தர் கூட்டத்தைப் பாதுகாப்பான முறையில் அன்னதானத்திற்கு வழிநடத்த குறிப்பிட்ட தொண்டூழியர்கள் நியமிக்கப்பட்டனர். - படம்: சிவாயா
வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்குக் குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றன.
வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்குக் குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றன. - படம்: சிவாயா
அன்னதானத்திற்கு வரும் முதியோருக்கும் சிறப்பு தேவையுடையோருக்கும் தனி வரிசைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அவர்களுடன் துணைக்கு ஒருவர் செல்லலாம். அவர்களது நலனை உறுதிசெய்ய தொண்டூழியர்கள் சிலர் நியமிக்கப்படுகின்றனர்.  அவர்கள் பொதுமக்களின் வரிசையில் நிற்காமல் வசதியான முறையில் உணவு உண்ண ஏற்பாடுகள் உதவுகின்றன.
அன்னதானத்திற்கு வரும் முதியோருக்கும் சிறப்பு தேவையுடையோருக்கும் தனி வரிசைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அவர்களுடன் துணைக்கு ஒருவர் செல்லலாம். அவர்களது நலனை உறுதிசெய்ய தொண்டூழியர்கள் சிலர் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் பொதுமக்களின் வரிசையில் நிற்காமல் வசதியான முறையில் உணவு உண்ண ஏற்பாடுகள் உதவுகின்றன. - படம்: சிவாயா
குறிப்புச் சொற்கள்
பெருமாள்உணவுதமிழ்ஆலயம்