தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ் மொழித்திறன் 2025 போட்டிகளின் முன்பதிவு தொடக்கம்

1 mins read
c2838c4e-5637-4ee9-b7a9-09486a56e233
போட்டிகள் பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெறும் என்று செயற்குழு கூறியது. - படம்: பிக்சாபே

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான 37ஆம் ஆண்டு தமிழ் மொழித்திறன் போட்டிகளின் தொடக்கச் சுற்றுகளுக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது.

தெலுக் பிளாங்கா சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு ஏற்பாடு செய்துள்ள இப்போட்டிகள் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன. இதில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சு, கதை, பாட்டு, வாசிப்புப் போட்டிகள் இடம்பெறும்.

தெலுக் பிளாங்கா சமூக மன்ற பல்நோக்கு மண்டபத்தில் நடைபெறவுள்ள இப்போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் சிங்கப்பூரின் அனைத்து தொடக்கப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பள்ளி முதல்வர்கள், தமிழாசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் அல்லது தொலைப்பிரதி மூலம் தெரிவிக்கும்படி செயற்குழு கேட்டுக்கொண்டது.

பிப்ரவரி 8ஆம் தேதியன்று ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, நான்காம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியும் நடைபெறவுள்ளது. 15ஆம் தேதியன்று ஐந்தாம் வகுப்புக்கான பேச்சுப் போட்டியும், 22ஆம் தேதியன்று மூன்றாம் வகுப்புக்கான கதை கூறும் போட்டியும் மார்ச் 2ஆம் தேதி இரண்டாம் வகுப்புக்கான வாசிப்புப் போட்டியும் நடைபெறவுள்ளன. மார்ச் 8ஆம் தேதியன்று இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.

மார்ச் 29ஆம் தேதி அனைத்துப் போட்டிகளின் இறுதிச் சுற்றுகள் நடைபெற்று, பரிசளிப்பு விழாவும் நடைபெறும் என்று செயற்குழு கூறியது.

மேல்விவரங்களுக்கு தெலுக் பிளங்கா சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவை நாடலாம்.

கி. இராமமூர்த்தி 8118 4671 ச. விஜய் 9046 9910

குறிப்புச் சொற்கள்