சிங்கப்பூர் நாகூர் சங்கம், முஸ்லிம் லீக்கின் தேசிய தினக் கொண்டாட்டம்

1 mins read
d06bc7af-e383-40c1-ba1f-d629d1697b0f
இந்திய முஸ்லிம் பேரவை நிர்வாகிகள், சிங்கப்பூரின் சமூக நல தலைவர்கள், மூத்த சமூக அடித்தளத் தலைவர்கள், சிங்கப்பூர் நாகூர் சங்கம், முஸ்லிம் லீக் ஆகியவற்றைச் சேர்ந்தோர் தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். - படம்: நாகூர் சங்கம்

சிங்கப்பூர் நாகூர் சங்கமும் சிங்கப்பூர் முஸ்லிம் லீக்கும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) அல்மவத்தா பள்ளிவாசலில் தேசிய தினத்தை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சிங்கப்பூர் நாகூர் சங்கத்தின் தலைவர் முஹம்மது அசீம், சிங்கப்பூர் முஸ்லிம் லீக் தலைவர் மு.ஜஹாங்கீர் ஆகியோர் இதற்குத் தலைமை வகித்தனர். நாகூர் சங்கத்தின் செயலாளர் இப்ராஹிம், பொருளாளர் எஹ்யா மரைக்காயர், முஸ்லிம் லீக் அமைப்பின் செயலாளர் முஹம்மது கௌஸ், பொருளாளர் உபைதுல்லா ஆகியோர் நிகழ்வின் ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனர்.

சிங்கப்பூர் தேசிய தினப் பாடலை பென்கூலன் பள்ளிவாசல் தலைவர் முஹம்மது ரஃபீக் பாடினார். நாகூர் சங்கம் சார்பில் அல்மவத்தா பள்ளிவாசலில் நடத்தப்படும் சமய வகுப்புகளில் பயிலும் மாணவிகள், தேசிய தினத்தின் சிறப்புகள் குறித்துப் பேசினர்.

அத்தோடு நிகழ்ச்சி தொகுப்பு முதல் நிறைவு நன்றியுரை வரை மாணவிகளே நிகழ்வை நடத்தினர்.

அல்மவத்தா பள்ளிவாசல் தலைவர் ஹாஜி இதுவான் நிஜார், முன்னாள் தலைவர்கள் ஹாஜி சைஃபுல், ஹாஜி ஷரிஃபுதீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.

இந்திய முஸ்லிம் பேரவை நிர்வாகிகள், சிங்கப்பூரின் சமூக நல தலைவர்கள், மூத்த சமூக அடித்தளத் தலைவர்கள், சிங்கப்பூர் நாகூர் சங்கம், முஸ்லிம் லீக் ஆகியவற்றைச் சேர்ந்தோர் தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்