பிறருடன் பழகுவதிலும் சமூகமாக ஒன்றுகூடுவதிலும் விளையும் இன்பத்தைக் கொண்டாடுவதற்காக தொலைத்தொடர்பு நிறுவனமான சிங்டெல், ‘லைட்ஸ் அவுட்’ என்ற குறும்படத்தை வெளியிட்டுள்ளது.
நடிகர்கள் அகமது அலி கான், தெரெஸ் பி, டெரில் ஓங் ஆகியாேர் இந்தக் குறும்படத்தில் இணைகின்றனர்.
திரைக்கதையின் முக்கியக் கதைமாந்தரான ராஜு, தீபாவளிக்கு முன்னதாக கடைசி நேரத்தில் அவரது வண்ண மின்விளக்குகள் பழுதானதால் கவலையுறுகிறார். இருந்தபோதும், ராஜுவைக் காண வீட்டுக்கு வந்த அண்டை வீட்டார்களான திவ்யா, சார்ல்ஸ் இருவரும் உதவிக்கரம் நீட்டி தீபாவளி மின்விளக்குகளைப் பழையபடி மின்ன உதவுகின்றனர்.
பாரம்பரிய, நவீன அலங்காரங்களைக் கலந்து படைக்கும் இந்த ‘லைட்ஸ் அவுட்’ குறும்படம், அவசர காலகட்டத்திலும் தொலைத்தொடர்பு சேவை இணைப்புகளை உறுதிசெய்வதில் சிங்டெல் கொண்டுள்ள கடப்பாட்டை வெளிப்படுத்துவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
இன்ஸ்டகிராம், யூடியூப், டிக்டாக் தளங்களில் இந்தக் குறும்படத்தைக் காணலாம்.


