மைக்கல் ஜாக்சன் ரசிகர்களின் பிரம்மாண்ட நடனம்

மைக்கல் ஜாக்சன் ரசிகர்களின் பிரம்மாண்ட நடனம்

2 mins read
0280ea3c-48ae-4f78-97d1-0dc1a76018e7
மைக்கல் ஜாக்சன் ரசிகர்கள். - படம்: ஆயிஷா ரோஸ்

பாப் இசை உலகின் முடிசூடா மன்னன் மைக்கல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் திரைப்படபடமான மைக்கல் உலகெங்கும் வெளியீடு கண்டுள்ள நிலையில், சிங்கப்பூரின் ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள ‘ஷா ஹவுஸ்’ கட்டடத்திற்கு முன்னால் ஏப்ரல் 24ஆம் தேதி, மைக்கல் ஜாக்சன் ரசிகர்களின் உற்சாகமான ‘ஃபிளாஷ் மாப்’ நடனம் நடைபெற்றது.

அந்த நிகழ்வை ஒருங்கிணைத்த மைக்கல் ஜாக்சன் ரசிகர் வி. காந்தி குமார், 53, “நான் 10 வயதிலிருந்து மைக்கல் ஜாக்சனின் தீவிர ரசிகன். வெளிநாடுகளில் இதுபோன்ற ‘ஃபிளாஷ் மாப்’ நிகழ்ச்சிகள் நடப்பதைப் பார்த்துவிட்டு, ஏன் சிங்கப்பூரில் செய்யக்கூடாது என்று தோன்றியது என்றார் அவர்.

“வாட்ஸ்அப் குழுவின் மூலம் அனைவரையும் ஒருங்கிணைத்தோம். அனுமதியைப் பெற எங்களுக்கு ஒரு மாத காலம் எடுத்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மைக்கல் ஜாக்சனின் கதை திரைப்படமாக்கப்பட்டு இருப்பதால், சிங்கப்பூர் ரசிகர்களாக அவருக்கு இந்த ‘ஃபிளாஷ் மாப்’ நடனம் மூலம் மரியாதை செய்ய விரும்பினோம்,” என்று அவர் கூறினார்.

மைக்கல் ஜாக்சன் ரசிகை கஸ்தூரி.
மைக்கல் ஜாக்சன் ரசிகை கஸ்தூரி. - படம்: ஆயிஷா ரோஸ்

அந்த நிகழ்வில் பங்கேற்றார் மற்றொரு மைக்கல் ஜாக்சன் ரசிகர் ஜி. பார்த்திபன், 50.

“ஒவ்வொரு தலைமுறையைச் சேர்ந்தவர்களும் மைக்கல் ஜாக்சனைப்போல் நடனமாட வேண்டும் என்பது எங்களது ஆசை. அதனால், குழந்தைகள் முதல் பெரியோர்வரை பலரும் இங்கு நடனம் ஆடினோம். எங்களோடு 64 வயது முதியவர் ஒருவரும் நடனமாடினார். நான் ஜாக்சனைப் பார்த்து நடனம் கற்க ஆரம்பித்தேன்,” என்றார் பார்த்திபன்.

மைக்கல் ஜாக்சன் ரசிகர்களின் நடனம்.
மைக்கல் ஜாக்சன் ரசிகர்களின் நடனம். - படம்: ஆயிஷா ரோஸ்

மைக்கல் ஜாக்சனின் புகழ்பெற்ற பாடல்களுக்குப் பல தலைமுறைகளைச் சேர்ந்த ரசிகர்கள் ஆடிய அந்த நடனம், பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது. வயது தடையின்றி கலை ஆர்வத்தின் சங்கமமாக அந்த ‘ஃபிளாஷ் மாப்’ நிகழ்வு அமைந்தது.

குறிப்புச் சொற்கள்