நிதி திரட்டிய தீபாவளிச் சந்தை

நிதி திரட்டாக அமைந்த தீபாவளிச் சந்தை கடந்த அக்டோபர் 8ஆம் தேதி ஞாயிறு அன்று காலை 10 முதல் 8 மணி வரை சிண்டாவின் வளாகத்தில் நடைபெற்றது. ‘கிரியேட் எஸ்ஜி’ சமூக நிறுவனம் நடத்திய இந்நிகழ்வில் இல்லம் சார்ந்து இயங்கும் 62 வர்த்தகங்கள் இடம்பெற்றிருந்தன.

நேபால், கம்போடியா, சென்னை ஆகியவற்றில் உள்ள அனாதை இல்லங்களுக்கும் பள்ளிகளுக்கும் கல்வி மற்றும் உணவு தொடர்பில் நிதி திரட்டுவதே இச்சந்தையின் முக்கியக் குறிக்கோள். சந்தையில் இடம்பெற்ற வர்த்தகங்கள் வழங்கிய வாடகைமூலம் நிதி சேகரிக்கப்பட்டது.

இச்சந்தை, இல்லம்சார் வர்த்தகங்கள் தங்களின் பொருள்களையும் சேவைகளையும் காண்பிக்க, ஒரு தளமாகவும் அமைவதாக ‘கிரியேட் எஸ்ஜி’ இணை நிறுவனர் குமரவேலு, 41, குறிப்பிட்டார். செல்வி தேவி விஜயன், 34 அவருடன் ‘க்ரியேட் எஸ்ஜி’யை 2018ல் நிறுவினார்.

மூன்று மாதங்களுக்கு முன்பு, ‘கிரியேட் எஸ்ஜி’ சமூக ஊடகங்களில் இந்நிகழ்ச்சி குறித்து அறிவித்திருந்தது.

அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இதைவிடப் பெரிய சந்தையை ஏற்பாடு செய்யத் திட்டமிடுகிறது ‘கிரியேட் எஸ்ஜி’ .

மேல்விவரங்களுக்கு: https://kriyaidsg.com/, https://tinyurl.com/KriyaiD மற்றும் https://www.youtube.com/watch?v=bZPYIm_Ft5I

சிறு வர்த்தகர்கள், குறிப்பாகப் பெண்கள் செய்த கைவினைப் பொருள்களை தென்கிழக்காசியாவில் விற்கும் 'Wooden Chest'. படம்: ரவி சிங்காரம்
'டாரட்' மூலம் ஜோசியம் வழங்கும் 'A Tarot's Tale'
பத்தாண்டுகளுக்கு சேலை, அணிகலன்களை விற்றுவரும் 'Pleatz Please'. முக ஒப்பனை, 'மசாஜ்' சேவைகளுடன் சுயமாகத் தயாரிக்கப்பட்ட கண் சீரத்தையும் விற்கின்றனர்.
Shobha's Achar மற்றும் காஷ்மீரியன், ஹிமாலயன் இயற்கைப் பொருள்களை விற்கும் Saamsara Enterprise.
நகை, அணிகலன்களை விற்கும் svatanya
தெற்காசிய நூல்களை சிங்கப்பூரில் விற்கும் 'A Likely Story' இணையவழி நூலகக்கடை. (@alike.lystory)
கவிதா, ஜீவிதா நடத்தும் 'முறுக்கு மாமிஸ்' (The Murukku Maamis)
'The Brownie Fairy', இந்திய பாணியில் வீட்டில் செய்யப்பட்ட 'ப்ரெளனி' பலகாரங்களை வழங்குகிறது.
ஆன்மீக ஊதுவத்திகளை விற்கும் 'Beyond Luxe by Kelly Angel', ருத்ராக்ஷங்கள், ஊதுவத்தி, ஆன்மீக ஆலோசனைகளை வழங்கும் 'சிவ சமாதி' (Shiva Samadhi).
SV Bakes வழங்கும் பலகாரங்கள், 'ColourfulFlorals' படைக்கும் பூக்கள்.
பெண்களுக்கான ஆடைகள் விற்கும் curvydesicollections, சிறுவர்களுக்கான (3 மாத சிறுவர்களுக்குக்கூட) பாரம்பரிய உடைகளை விற்கும் Little Rudraksha Creations.
பெண்களுக்கான ஆடைகள் விற்கும் curvydesicollections, சிறுவர்களுக்கான (3 மாத சிறுவர்களுக்குக்கூட) பாரம்பரிய உடைகளை விற்கும் Little Rudraksha Creations.
லோகோ, ஸ்டிக்கர் போன்றவற்றைச் செய்யும் Ambiarts, மற்றும் கலைவழி சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் Artkidnot. இங்கு தீபாவளி அட்டைகள், தோள்பைகளை விற்றனர்.
Sri Durga Ethnic பாரம்பரிய உடைகள்
Dheebham Blossom - பெண்மனிகளுக்கான பாரம்பரிய உடைகள்.
Kanmani Krafts நகைகள்.
தனித்துவமிக்கப் பரிசுப் பொருள்களை விற்கும் 'Oh My Gosh', மெட்ராஸ் ஸ்ட்ரீட்டில் ஒரு கடையையும் கொண்டுள்ளது.
இணையம்வழி தனிப்பயனாக்கப்பட்ட சேலைகளை விற்கும் 'ருத்ராக்ஷா'.
பத்தாண்டுகளாக இயங்கிவரும் 'JewelBox Regunathan', நகைகள், தோள்பைகள், பணப்பைகள் (ரஜினி, விஜய் படங்கள் கொண்டவை உட்பட!) போன்றவற்றைச் செய்து விற்றுவருகிறது.
இந்திய பாணியில் விதவித சுவைகளில் 'ஹாட் டாக்' வழங்கும் 'Muthu's Kitchen'
உடை, நகைகளை விற்கும் Abrakadabra
படிகங்கள் (Crystals) விற்கும் 'LeoCrystalMeraki'.
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!