தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழுக்குச் சிறப்பு சேர்த்த உள்ளூர் தமிழர்களுக்கு நினைவேந்தல்

1 mins read
e0ddd1a2-46ab-4ab5-9401-c1ef8019f058
தமிழுக்குச் சிறப்பு சேர்த்த ஒன்பது பேரைக் கொண்டாடும் ‘நினைவின் தடங்கள்’. - படம்: தேசிய நூலக வாரியம் 

தமிழ் மொழிக்குச் சிறப்பு சேர்த்தவர்களைக் கெளரவிக்கும் விதமாக தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவு ‘நினைவின் தடங்கள்’ எனும் நிகழ்ச்சியை 2017ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இவ்வாண்டு இந்நிகழ்ச்சி சனிக்கிழமை (டிசம்பர் 9) மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை தேசிய நூலக வாரியத்தின் ‘தி பாட்’ அரங்கில் நடைபெறும். 

இவ்வாண்டு ஆ.பழனியப்பன், ந.பாலபாஸ்கரன், சை.பீர்.முஹம்மது, ரெ.சோமசுந்தரம், கலைச்செம்மல் ராம் நாராயணசாமி, பாத்தூறல் முத்துமாணிக்கம், எம்.கே.நாராயணன் உள்ளிட்ட ஒன்பது பேர் நினைவுகூரப்பட உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்