கதைக்களத்தில் எழுத்தாளர் பொன் சுந்தரராசுவின் “துமாசிக்”

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கதைக்களம் நிகழ்ச்சி மார்ச் 3ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 4 மணிக்கு, சிங்கப்பூர்த் தேசிய நூலகத்தின் ஐந்தாவது தளத்தில் அமைந்துள்ள ‘இமேஜினேஷன்’ அறையில் நடைபெறவிருக்கிறது. 

எழுத்தாளர் பொன் சுந்தரராசுவின் ‘துமாசிக்’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள், சிங்கப்பூர் சமூகக் கலாசாரத்தைப் பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல் சிங்கப்பூரின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இருமொழியில் எழுதப்பட்ட இச்சிறுகதைத் தொகுப்பின் கலந்துரையாடல் அங்கமும் இடம்பெற இருக்கிறது.

கதைச் சொல்லி செவி இன்பம் சங்கீதா நூலின் சிறப்புகளைக் கதைக்கள வாசகர்களோடு பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து நூலாசிரியருடன் இடம்பெறும் கலந்துரையாடல் அங்கத்தில் திருவாட்டி பிரியா மற்றும் செல்வி யாழினி கமலக்கண்ணன் அவர்களும் பங்கேற்று கலந்துரையாட இருக்கின்றனர். 

கதைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலும் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படவிருக்கின்றன.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் இளையர் பிரிவு உறுப்பினரான மாணவி தன்மதி பங்கேற்று, நெறிப்படுத்தும் இந்நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

மே மாத நூல் அறிமுகப் போட்டிக்கு, சிங்கப்பூர் தேசிய நூலகத்திலுள்ள சிறுகதை, குறுநாவல் அல்லது நாவல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் நயம்பட நூலறிமுகத்தை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த 4 நூலறிமுகங்களுக்கு ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன.

மூன்று பிரிவுகளாக நடைபெறும் மே மாதச் சிறுகதைப் போட்டிக்கு எழுதுவதற்கான தொடக்க வரிகள்:

உயர்நிலைப் பள்ளி மாணவர் பிரிவு: 200 முதல் 300 சொற்களுக்குள் எழுத வேண்டும்.

“தோளில் மாட்டியிருந்த பையைக் கீழே வைத்துவிட்டு அச்சத்துடன் நிமிர்ந்து பார்த்தேன்”

இளையர் பிரிவு: 300 முதல் 400 சொற்களுக்குள் எழுத வேண்டும்.

“தட்டுத் தடுமாறி, படிகளையும் கதவையும் கண்டுபிடித்து வீட்டினுள் நுழைந்தேன்” 

பொதுப்பிரிவு: 400 முதல் 500 சொற்களுக்குள் எழுத வேண்டும்.

“புரியாததைப்போல நீ நடிப்பது எனக்குத் தெரியாதா?” என்னைப் பார்த்துக் கேட்டார்”

படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு http://singaporetamilwriters.com/kkcontest என்ற

மின்னியல் படிவத்தின் வழியாக 26/04/2024 வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பி வைக்கவும்.

மேல்விவரங்களுக்கு: http://singaporetamilwriters.com/kathaikalam/ என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

அல்லது பிரதீபா வீரபாண்டியன் - 81420220/ பிரேமா மகாலிங்கம் - 91696996 ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!