மகனின் மருத்துவச் செலவுக்காக நிதி திரட்டும் தந்தை

கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட சிரமங்கள் குறைந்து, வாழ்க்கை சீராகத் தொடங்கியதை எண்ணி மகிழும் முன்பே சந்தோஷ்குமார்-பாக்யா தம்பதியருக்குப் பேரிடியாக விழுந்தது அவர்களின் ஆறு வயது மகன் ஸ்ரீராமுக்கு ஏற்பட்ட தீவிர நிமோனியா நோய்.

அந்நோயினால் ஏற்பட்ட ஒரு மாதகால மருத்துவமனைச் செலவு, தம்மிடம் இருந்த $20,000 சேமிப்பையும் கரைத்துவிட, மீதமுள்ள மருத்துவமனைக் கட்டணத்துக்குப் பொது நிதித் திரட்டலைச் சார்ந்திருக்கிறார் சந்தோஷ்.

துறுதுறுவென ஓடியாடிக் கொண்டிருந்த ஸ்ரீராம் திடீரென காய்ச்சலில் பாதிக்கப்பட, மருத்துவர் பரிந்துரையின் பேரில் அவருக்கு ஓரிரு நாள் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து வாந்தி, மூச்சுத்திணறல் என அறிகுறிகள் அதிகமாகவே, பரிசோதனை மூலம் நிமோனியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விரைவில் உடல்நிலை மேலும் மோசமடைந்து, நுரையீரலைத் தொடர்ந்து கல்லீரல் வரை தொற்று பரவியதைச் சற்றும் குறையாத பயத்துடன் பகிர்ந்தார் திரு சந்தோஷ்.

ஸ்ரீராம் உடனடியாகத் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதோடு, அவருக்குத் தொற்று நீக்க அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து நுரையீரலில் உள்ள காற்றை வெளியேற்ற விலாப்பகுதியில் துளையிடப்பட்டு அதில் அதற்குரிய கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இவை அனைத்துக்கும் சேர்த்து ஏறத்தாழ $90,000 செலுத்த வேண்டியுள்ளது என்று ஸ்ரீராமின் பெற்றோர் கூறினர். ஒருவர் வருமானத்தில் நடைபெறும் குடும்பம், திடீரென இவ்வளவு பெரிய செலவு ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை எனவும் தனது நிறுவனக் காப்பீட்டுத் திட்டமும் மகனுக்குக் கைகொடுக்காத நிலையில், வேறு வழியின்றி நிதி திரட்டும் முயற்சியில் தாம் இறங்கியுள்ளதாக திரு சந்தோஷ் சொன்னார்.

சிறு வயதில் தீவிர நோயையும் சிகிச்சையையும் துணிவுடன் தங்கள் மகன் எதிர்கொண்டு போராடுவதை வலியுடனும் நெகிழ்வுடனும் குறிப்பிட்டார் திருவாட்டி பாக்யா.

எப்பாடுபட்டாவது மகனைக் காப்பாற்றுவதையே தங்கள் குறிக்கோள் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தன் மகன் மீண்டெழுந்து பழைய நிலைக்குத் திரும்புவார் எனவும் தங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி திரும்பும் எனவும் உறுதியாக நம்புகிறார்.

ஏப்ரல் 15ஆம் தேதி நிலவரப்படி, ஸ்ரீராமுக்கு ஏறத்தாழ $69,000 நிதி திரட்டப்பட்டுள்ள நிலையில், இன்னும் $21,000 நிதி தேவைப்படுகிறது. நிதியளிக்க விரும்புவோர், give.asia இணையத்தளத்தில் தங்கள் பங்கை அளிக்கலாம்.

https://give.asia/campaign/help-my-boy-sriram-fight-influenza-and-pneum…

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!