தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொன்மலர்ப் பூங்கா நூல் வெளியீடு

1 mins read
d650eccf-0062-4207-92ee-accea7a8fdda
நூல் வெளியீட்டு விழாவில் சுமார் 140 பேர் கலந்துகொண்டு தமிழ்ப் பேச்சுகளை ரசித்தனர். - செய்தி, படம்: மலரொளி
multi-img1 of 2

சிங்கப்பூர் மீடியாகார்ப் செய்திப் பிரிவில் சுமார் 30 ஆண்டுகள் செய்தியாளராகப் பணியாற்றிய திரு சு.விசுவலிங்கம் எழுதிய ‘பொன்மலர்ப் பூங்கா’ நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை தேசிய நூலகக் கட்டடத்தில் நடந்தேறியது.

தமிழ் முரசு நாளிதழின் ஆசிரியர் த.ராஜசேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் முனைவர் ஆதித்தியன் அப்பன், ஒலி 96.8 வானொலி நிலைய முன்னாள் தலைவர் பால. பத்மநாபன், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன், சிங்கப்பூர் பேசும் கலை வளர்ப்போம் அமைப்பின் தலைவர் புதிய நிலா மு. ஜஹாங்கீர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி நூலாசிரியரின் தமிழ் உணர்வைப் பாராட்டினர்.

சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் அ.முஹம்மது பிலால் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் நூலை ஆய்வுரை நிகழ்த்தினார்.

1959லிருந்து தாம் பார்த்ததையும் கேட்டதையும் உணர்ந்ததையும் 45 தலைப்புகளில் கட்டுரைகளாக எழுதியிருப்பதாக நூலாசிரியர் கூறினார்.

அவை மக்களுக்குப் பயனளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

‘உணர்வுள்ள தமிழன் யார்?’ எனும் கட்டுரையில் நூலாசிரியரின் உள்ளக்குமுறல்களை வாசகர்கள் உணரலாம்.

செல்வன் இதன் அழகேசனின் புல்லாங்குழல் இசையுடன் தொடங்கிய விழாவில் சுமார் 140 பேர் கலந்துகொண்டு சொற்பொழிவுகளை ரசித்துக் கேட்டனர்.

குறிப்புச் சொற்கள்