சங்க இலக்கிய நூல்களின் மொழி, பொருள் செறிவை ஆராய்ந்து அறிவதற்கான கலந்துரையாடல்களைச் சிங்கப்பூரில் ‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ அமைப்பு நடத்தி வருகிறது.
அந்த வரிசையில் ‘கோடைத் தமிழ் உலா 2026’ என்ற நிகழ்ச்சி சிங்கப்பூர் நேரப்படி மே 24 மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இணைய வெளியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இணைய விரும்புவோர் ஸூம் (Zoom) இணைப்பின் (https://tinyurl.com/pozhil2026ktu) வழி கலந்துகொள்ளலாம்.
ஸூம் சந்திப்பு எண் (Meeting ID): 895 9074 5366 மறைச்சொல் (Passcode): pozhil
மூதுரை, நல்வழி, புறநானூறு உள்ளிட்ட இலக்கியங்களை ஒட்டிக் குறுநாடகங்களை இந்த அமைப்பு அரங்கேற்றி வருகிறது.
திருக்குற்றாலக் குறவஞ்சி இசை நாட்டியம், முத்தொள்ளாயிரம் காட்டும் மூவேந்தர்கள் இசை நாட்டியம், முல்லைத்திணை நாடகம் உள்ளிட்டவற்றையும் இந்த அமைப்பு படைத்திருக்கிறது.
பல்வேறு கருத்தரங்கங்கள், பன்னாட்டுக் கவியரங்கம் ஆகியவற்றுடன், சிங்கப்பூரில் 2018 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதங்களில் ‘இலக்கியச் சங்கமம்’ நிகழ்ச்சியையும் இந்த அமைப்பு நடத்தி வருகிறது.

