மேடைப் பேச்சில் மிளிர்ந்த தமிழ்

மேடைப் பேச்சில் மிளிர்ந்த தமிழ்

2 mins read
013daeaa-0bd7-4ffb-b6e4-b411c6b7acdd
சிறப்புப் பேச்சுப் போட்டிகளின் வெற்றியாளர்கள். - படம்: ஆயிஷா ரோஸ்

தமிழ்மொழி விழாவை முன்னிட்டு, மண்டலம் 80 ‘டி’ பிரிவு பேச்சாளர் மன்றங்கள் ஏற்பாடு செய்த சிறப்புப் பேச்சுப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) சிண்டா எனப்படும்  சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் அரங்கத்தில் நடைபெற்றன.

உரை, அரங்கப் பேச்சு என இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் 90க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

போட்டிகளில் 90க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
போட்டிகளில் 90க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். - படம்: ஆயிஷா ரோஸ்

உரைப் பிரிவில் தலைப்பு முன்கூட்டியே வழங்கப்பட்டது. மாவட்ட அளவிலான அதன் இறுதிப் போட்டியில் எட்டுப் போட்டியாளர்கள் பங்கேற்றனர்,” என்று நிகழ்ச்சிப் பற்றி ‘டி’ பிரிவு இயக்குநர் கேத்திரபாலன் மூக்காண்டி கூறினார்.

“அரங்கப் பேச்சுப் பிரிவில் தலைப்பு போட்டியின்போது அறிவிக்கப்பட்டது. போட்டியாளர்கள் இரண்டு நிமிடங்களுக்குள் உரையை வழங்கினர். இப்போட்டிகள் மூலம் தன்னம்பிக்கைமிக்க பேச்சாளர்களை உருவாக்குவதே நோக்கம்,” என்று அவர் கூறினார்.

“மொத்தம் 18 தமிழ் மன்றங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களின் பேச்சாற்றலை வெளிப்படுத்தினர்,” என்றார் அவர்.

உரைப் பிரிவில் முதலிடம் வென்ற காட்வின் செல்வராஜ், “ஒரு சூழலை நாம் ஆழமாக ஆய்வு செய்தால், நமது நிலைமைக்குப் பெரும்பாலும் நாமே முதன்மைக் காரணம் என்பதை உணரமுடியும். இந்த உண்மையை மக்களுக்கு உணர்த்துவதே எனது பேச்சின் முக்கிய நோக்கம். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்ற உண்மையை உணர்ந்தால் மாற்றத்தை ஏற்படுத்தலாம்,” என்று சொன்னார்.

அரங்கப் பேச்சுப் பிரிவில் வாகை சூடிய அருண் சந்திரசேகர், “அரங்கப் பேச்சுப் பிரிவில் தலைப்பு அப்போதுதான் வழங்கப்பட்டது. கொடுக்கப்பட்ட தலைப்பைப் பற்றி மிக விரைவாகச் சிந்தித்து, ஒரு தெளிவான கட்டமைப்போடு உரையாற்ற வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

“இந்தத் தலைப்பிற்காக, சோர்வின்றி உழைக்கும் பெண்கள், குறிப்பாகத் தாய்மார்களின் அயராத உழைப்பைப் போற்றும் வகையில் என் உரையை அமைத்தேன்,” என்றார்.

வெற்றிக் கோப்பைகளைத் தாண்டி, ஒவ்வொரு பங்கேற்பாளரின் தன்னம்பிக்கையும் ஆளுமைத் திறனும் இப்போட்டியின் உண்மையான வெற்றியாகக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்