சிங்கப்பூர் குறித்த பலதுறை ஆய்வுக்கட்டுரைகளை உள்ளடக்கியுள்ள ‘அறிந்ததும் அறியாததும்’, சிறுவர் பாடல்களைக் கொண்ட ‘பூந்தோட்டம்’, மிட்டாய்த்தட்டு என மூன்று நூல்கள் அண்மையில் வெளியீடு கண்டுள்ளன.
தேசிய நூலக வாரியத்தின் ஐந்தாம் தளத்தில் அமைந்துள்ள ‘இமேஜிநேஷன்’ அறையில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி அந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமதி வசந்தி ராமச்சந்திரனின் தமிழ் வாழ்த்தோடு நூல் வெளியீட்டு விழா தொடங்கியது.
அந்த நிகழ்ச்சியில், சமூகத் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
அதோடு, எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர் கனி நூல்களை வெளியிட்டார்.
கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் துணைத் தலைவர் மு.அ.மசூது, எழுத்தாளர்களின் நூல்கள் வாங்கப்பட்டு மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அன்பளிப்பாக வழங்கப்படலாம் என்று கூறினார்.
முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் இரா.தினகரன் சிறப்புரை ஆற்றினார்.
நூலாசிரியர் முனைவர் ஸ்ரீலக்ஷ்மியின் பன்முகப்பட்ட எழுத்தாற்றல், அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பற்றி அவர் விரிவாகப் பேசினார்.
அவர் மேலும் பல நூல்களை எழுதி, சிங்கப்பூரின் தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றவேண்டும் என்றும் திரு தினகரன் கேட்டுக்கொண்டார்.


