‘பேஷன்’ நிறுவனம், தூய்மையான குடிநீர் வசதி இல்லாத குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் நடை, ஓட்ட நிகழ்ச்சியொன்றை நடத்துகிறது
வறுமையில் வாடும் குழந்தைகளுக்கும் அவர்கள் இருக்கும் சமூகங்களுக்கும் உதவும் ‘வோர்ல்ட் விஷன் சிங்கப்பூர்’ அறநிறுவனத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.
வரும் அக்டோபர் 3ஆம் தேதி நடை, ஓட்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
உலகின் பல பகுதிகளில் தூய்மையான குடிநீரைப் பெறக் குழந்தைகள் பலர் அன்றாடம் கிட்டத்தட்ட 6 கிலோமீட்டர் நடக்கவேண்டியிருக்கிறது.
அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்.
ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் தூய்மையான குடிநீர் வசதிகள் இல்லாத 12,000 குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டத் திட்டம் முனைகிறது.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்:
- பதிவு: 14 ஆகஸ்ட் 2026 அன்று தொடங்கியது.
- கட்டணம்: $6
- முன்கூட்டியே பதிவு செய்வோருக்குச் சலுகைகள்: முதலில் பதிவு செய்யும் 200 பேருக்கு ‘பேஷன்’ பொருள்களும் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படும்.
- பயணப் பாதை: மரினா பே நீர்முகப்பு, ஹெலிக்ஸ் பாலம், மரினா நீர்த்தேக்கம் போன்ற சிங்கப்பூரின் அழகிய அடையாளச் சின்னங்களைக் கடந்துசெல்லும் வகையில் இந்தப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
- பங்கேற்பாளர்கள் விருப்பத்திற்கேற்ப நடந்தோ, மெதுவாக ஓடியோ வேகமாக ஓடியோ இதைப் பூர்த்தி செய்யலாம்.
நிகழ்ச்சியில் பங்கெடுக்க விரும்புவோர் ‘பேஷன்’ நிறுவனத்தின் இணையத்தளம் வழியாகப் பதிவுசெய்து கொள்ளலாம்.


