தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘காரைக்கால் அம்மையார் காட்டும் வழி’ நூல் வெளியீடு

1 mins read
7a4759d4-7d62-44e9-b826-72cbc7c1d810
ஸ்ரீ ருத்ரகாளியம்மன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. - படம்: முனைவர் ச.மீனாட்சி

வானொலிப் புகழ் முனைவர் ச.மீனாட்சி எழுதியுள்ள ‘காரைக்கால் அம்மையார் காட்டும் வழி’ நூல் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) வெளியீடு காண்கிறது.

டெப்போ சாலையிலுள்ள ஸ்ரீ ருத்ரகாளியம்மன் ஆலயத்தில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நிகழ்ச்சி நடைபெறுகிறது

ருத்ரகாளியம்மன் ஆலயத்துடன் சிங்கப்பூர் இந்து சபை, அகண்ட தமிழ் உலகம், சிங்கப்பூர் சைவ சித்தாந்த சங்கம், அதிகை தமிழ் சைவக் கல்வி நிலையம், விவேகானந்தா சேவா சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றன.

இந்து ஆலோசனை வாரியத்தின் தலைவர் செங்குட்டுவன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

காரைக்கால் அம்மையாரின் பாடல்களில் உள்ள கருத்துகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னதாக இந்நூல், மலேசியாவின் கிள்ளானிலுள்ள தெலுக் புலாய் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் டிசம்பர் 8ஆம் தேதி வெளியீடு கண்டது. அங்கு நூல் ஆய்வுரை வழங்கிய சிங்கப்பூர் தாரகை இலக்கிய வட்டத்தின் நிறுவனரும் தலைவருமான அ.மஹ்ஜபீன் இங்கும் ஆய்வுரை செய்கிறார்.

சிங்கப்பூர் வந்திருக்கும் தமிழ்நாட்டு ஊடகப்புகழ் பால கௌதமன் இந்நிகழ்வில் கலந்துகொள்கிறார். பதின்ம வயது இளையர் ஆதித்யாவின் மிருதங்க இசையும் உண்டு.

நிகழ்ச்சி குறித்த மேல்விவரங்களுக்கு 9456 1736 என்ற எண்ணை அழைக்கலாம்.

குறிப்புச் சொற்கள்