தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கதைக்களத்தில் எழுத்தாளர் மணிமாலா மதியழகனின் ‘ஆழிப்பெருக்கு’

2 mins read
0020b4f0-2cb8-4e3e-92b7-41232036c870
14 சிறுகதைகளைக் கொண்டுள்ளது எழுத்தாளர் மணிமாலா மதியழகனின் ‘ஆழிப்பெருக்கு’ சிறுகதைத் தொகுப்பு. - படம்: சிங்கப்பூர் புத்தக மன்றம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கதைக்களம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) மாலை 4 மணிக்கு தேசிய நூலகத்தின் ஐந்தாவது தளத்தில் உள்ள ‘இமேஜினேஷன்’ அறையில் நடைபெறுகிறது. 

நிகழ்வில் எழுத்தாளர் மணிமாலா மதியழகனின் ‘ஆழிப்பெருக்கு’ நூல் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

கதைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலும் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படும்.

நவம்பர் மாத நூல் அறிமுகப் போட்டிக்கு, தேசிய நூலகத்திலுள்ள சிறுகதை, குறுநாவல் அல்லது நாவல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் நயம்பட நூலறிமுகத்தை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த 4 நூலறிமுகங்களுக்கு ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன.

மூன்று பிரிவுகளாக நடைபெறும் நவம்பர் மாதச் சிறுகதைப் போட்டிக்கு எழுதுவதற்கான தொடக்க வரிகள் பின்வருமாறு:

உயர்நிலைப் பள்ளி மாணவர்ப் பிரிவு: 200 முதல் 300 சொற்களுக்குள் எழுத வேண்டும்.

‘எதிர்பாராத பிரச்சினையால் தேர்வு எழுத முடியாமல் போய்விடுமோ?’ என்று எண்ணி பதட்டமானான்.’

இளையர்ப் பிரிவு: 300 முதல் 400 சொற்களுக்குள் எழுத வேண்டும்.

‘செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படத்தைப் பார்த்ததும் கொதிப்படைந்தாள்.’

பொதுப்பிரிவு: 400 முதல் 500 சொற்களுக்குள் எழுத வேண்டும்.

‘சமாதானப்படுத்துவதற்கான சொற்கள் ஏதுமின்றி அன்று ஏன் கல்போலிருந்தேன் என்று புரியவில்லை.’

படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு http://singaporetamilwriters.com/kkcontest என்ற மின்னியல் படிவத்தின் வழியாக அக்டோபர் 25ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.

மேல்விவரங்களுக்கு: http://singaporetamilwriters.com/kathaikalam/ இணையப்பக்கத்தை நாடலாம் அல்லது பிரதீபா வீரபாண்டியன் - 81420220 / பிரேமா மகாலிங்கம் - 91696996 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்