தீபாவளி கொண்டாடும் இளைய தலைமுறை

தீபாவளி கொண்டாடும் இளைய தலைமுறை

படம்: இளைய தலைமுறை

08 Nov 2026 - 12:15 pm

2 mins read

தீபாவளிக் கொண்டாட்டங்களின் வழி பண்பாட்டில் மறுமலர்ச்சி உண்டாக்க வல்லது இந்திய இளையர்களின் துடிப்பு. இளையர்களை மையமாகக் கொண்ட தமிழ் முரசின் இளைய தலைமுறை தளம், தீபாவளி உற்சாகத்தைச் சமூக ஊடகப் பதிவுகள் வழியாக வெகுவாகப் பிரதிபலித்துள்ளது.

அண்மைய வலையொளி ஒன்றில் இளையர்கள் தீபாவளியை எப்படிக் கொண்டாடுகின்றனர் என்பதோடு உறவினர்களின் சவாலான கேள்விகளை இளையர்கள் எவ்வாறு புன்னகையுடன் எதிர்கொள்கிறார்கள் என்ற சுவாரசியமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

உணவுப் பிரியர்களுக்காக பெர்ச் ரோடு (Birch Road) சந்தையில் ‘குனாஃபா வாஃபிள்’ (kunafa waffle), ‘சீஸ் பானிபூரி’ (cheese pani puri), ‘மைலோ பர்ஃபி’ (milo burfi) போன்ற புதுமையான உணவுகளை ருசித்து காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. சந்தையில் உள்ள சிறார், இளையர் கருத்துகளும் இந்தக் காணொளியில் இடம்பெறுகிறது.

இந்திய மரபுடைமை நிலையத்திற்கு வெளியே அமைந்துள்ள வண்ணமயமான தீபாவளிச் சந்தையையும் காணொளியாக ஆவணப்படுத்தினர் இளைய தலைமுறை குழு.

பெண்களுக்கான ‘1-நிமிடச் சேலைகள்’, பலாசோ-ஷராரா (palazzo and sharara) உடைகள், நவீன மூக்குத்திகள் முதல் ஆண்களுக்கான மாங்காய் உருவ அச்சுப் பருத்தி குர்தாக்கள் வரையிலான தீபாவளி ஆடைப் போக்குகள் பற்றிய காணொளியும் தயாராகப்பட்டது.

தமிழ் முரசு ஊழியர்கள் அலுவலகத்தில் முறுக்கு பிழிந்து மகிழ்ந்ததும், ரஜினியின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற பிரபல “புட்டாப்பு கேங்” (Putaapu Gang) பாடலுடன் பகிர்ந்த வாழ்த்துக் காணொளியும் பலரையும் கவர்ந்துள்ளன.

பாரம்பரியப் பண்டிகைகளை இளமைத் துடிப்புடனும் புதுமையோடும் கொண்டாடுவதில் ‘thisisIT’ வெகுவாக முயற்சிகள் எடுத்து வருவதை இந்த தீபாவளித் தொகுப்பு பறைசாற்றுகிறது.

இளைய தலைமுறையின் அனைத்து தீபாவளிக் காணொளிகளும் யூடியூப் தளத்தில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்
தீபாவளி 2026தீபாவளிகொண்டாட்டம்