ஏழைகளுக்கான குடும்ப அட்டைகளை வைத்துள்ள 1.82 லட்சம் ரயில்வே ஊழியர்கள்

ஏழைகளுக்கான குடும்ப அட்டைகளை வைத்துள்ள 1.82 லட்சம் ரயில்வே ஊழியர்கள்

கோப்புப் படம்: ஜக்ருத் பாரத்

16 Nov 2026 - 5:40 pm

1 mins read

புதுடெல்லி: பொருளியலில் பின்தங்கிய, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்காக வழங்கப்படும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டக் குடும்ப அட்டைகளை, 1.82 லட்சத்துக்கும் அதிகமான ரயில்வே ஊழியர்கள் வைத்துள்ளமை மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதையடுத்து, அந்த அட்டைகளை உடனடியாகத் திருப்பி வழங்குமாறு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய உணவு, பொது விநியோகத்துறை மேற்கொண்ட விரிவான ஆய்வில் இந்தத் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெரும்பாலான மாநில விதிகளின்படி, அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனப் பணியாளர்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சலுகைகளைப் பெறத் தகுதியற்றவர்கள்.

இந்நிலையில், சராசரியாக ரூ.40,000 முதல் ரூ.2.5 லட்சம் வரை மாதச் சம்பளம் பெறும் ரயில்வே ஊழியர்கள் இத்தகைய மானிய அட்டைகளை வைத்திருப்பது பெரிய விதிமீறலாகும்.

இதையடுத்து, அனைத்து ரயில்வே மண்டலப் பொது மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ரயில்வே ஊழியர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் எந்தவொரு மானியச் சலுகையையும் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விதிமீறிச் சலுகைகள் பெற்றிருப்போரிடம் இருந்து உறுதிமொழிப் படிவத்தைப் பெற்றுக்கொண்டு குடும்ப அட்டைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பிடச் சான்று போன்ற பல்வேறு ஆவணங்களுக்கு இது அடையாள அட்டையாகப் பயன்படுவதாலேயே ஊழியர்கள் இதனைப் பெற்றிருக்கலாம் என்று தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்
ரயில்வேஊழியர்ஆய்வுபொருளியல்