தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒடிசா ரயில் விபத்து; 101 பயணிகள் காணவில்லை

1 mins read
1737b837-cb0d-4381-9299-7a6d2bd626b9
படம்: ஏஎஃப்பி -

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கியவர்களில் 101 பயணிகளை கண்டுபிடிக்கமுடியவில்லை.

விபத்தில் மாண்டவர்களின் உடல்கள் மோசமாகச் சிதைந்துள்ளதால் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க அவர்களது உறவினர்கள் தடுமாறி வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்தில் ரயில் விபத்து ஏற்பட்டது.

கோல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்ற அதிவிரைவு ரயிலுடன் மோதிக்கொண்டது.

விபத்து நடக்கும் போது இரண்டு ரயில்களிலும் கிட்டத்தட்ட 2,500 பயணிகள் இருந்தனர். அதில் 288 பேர் மாண்டனர், கிட்டத்தட்ட 1,100 பயணிகள் காயமடைந்தனர். 56 பேருக்கு கடுமையாக காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இன்னும் பலரது சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளது. பிரேத பரிசோதனையிடத்தில் உடல்களை அடையாளம் காணுவதில் சிக்கல்கள் இருப்பதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

காயமடைந்தவர்களில் பலர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

ரயில்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் கட்டமைப்பு ஒழுங்காக இயங்காமல் போனதால் பெரும் ரயில் விபத்து ஏற்பட்டதாக இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வை‌ஷ்னவ் தெரிவித்துள்ளார்.

கட்டமைப்பு ஒழுங்காக இயங்காமல் போனதற்கு என்ன காரணம், இதை கவனிக்காமல் விட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். விபத்து குறித்து மேலும் சில முக்கிய விவரங்கள் விசாரணையின் முடிவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்