தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2023 முதல் டெல்லியில் 15,000 கைப்பேசிகள் மீட்பு

1 mins read
7cb9d07a-8d29-42b1-9723-56fc991ddf74
டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா, மீட்கப்பட்ட 1,559 கைப்பேசிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். - படம்: ஊடகம்

புதுடெல்லி: டெல்லியில் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் இதுவரை, காணாமல் போன 15,000க்கும் மேற்பட்ட கைப்பேசிக் கருவிகளை அம்மாநிலக் காவல்துறை மீட்டுள்ளது. இதையடுத்து, காவல்துறைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.

இந்நிலையில், பிரபல எல்ஜி நிறுவனம், காவல்துறையையும் துணிச்சலான குடிமக்களையும் பாராட்டும் விதமாக, டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இதில் கலந்துகொண்ட டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா, மீட்கப்பட்ட ஏறக்குறைய 1,500 கைப்பேசிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

திருடப்பட்ட கைப்பேசிகளை மீட்டெடுக்க, காவல்துறை அர்ப்பணிப்புடன் பணியாற்றியதாகவும் மேலும் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களைத் தடுப்பதில் பொதுமக்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என்றும் டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் 22 காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

“இந்த ஆண்டு மட்டும், செப்டம்பர் 15ஆம் தேதி வரை, டெல்லியில் மட்டும் 6,432 கைப்பேசிகளை மீட்டுள்ளோம். அவற்றுள் 3,589 கைப்பேசிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

“கடந்த 2023 முதல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை, 15,591 கைப்பேசிகள் டெல்லி காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 12,446 கைப்பேசிகள் சரியான உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன,” என்றார் காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா.

குறிப்புச் சொற்கள்