புதுடெல்லி: அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின்னர் 1,563 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர், வணிக விமானங்களில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இத்தகவலை இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, திரு டிரம்ப் அதிபராக முதன்முறை பதவி வகித்த காலத்தில் (2017 முதல் 2021 வரை) அமெரிக்காவில் இருந்து 6,135 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
“கடந்த 2019ஆம் ஆண்டில்தான் அதிக எண்ணிக்கையிலானோர் நாடுகடத்தப்பட்டனர். அப்போது 2,042 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர். மற்ற ஆண்டுகளில் 1,024 பேர் (2017), 1,180 (2018), 1,889 (2020) பேர் நாடு கடத்தப்பட்டனர்,” என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஜோ பைடன் பதவிக்காலத்தில் நாடுகடத்தப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 3,000 ஆகக் குறைந்தது.