லிபியாவில் இருந்து 16 இந்தியர்கள் மீட்பு

1 mins read
69bb8470-8be1-45b5-b72e-482bd8e0aea8
லிபியாவில் இருந்து மீட்கப்பட்ட 16 பேர். - படம்: ஊடகம்

புதுடெல்லி: பத்து மாதங்களுக்கும் மேலாக லிபியா நாட்டில் சிக்கித் தவித்த இந்திய ஊழியர்கள் 16 பேர் புதன்கிழமை (பிப்ரவரி 5) இந்தியா திரும்ப உள்ளனர்.

உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களைச் சேர்ந்த 16 பேரும் லிபியாவில் உள்ள சிமென்ட் ஆலையில் பணியாற்ற கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அங்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் சிறை போன்ற சூழலில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் நீண்ட வேலை நேரம், ஒழுங்கற்ற ஊதியம், ஒப்பந்தத்தை மீறுதல் ஆகியவற்றால் அவதிப்படுவதாகவும் கூறப்பட்டது.

மேலும், ஊழியர்களை அடித்து உதைத்து வேலை செய்யும்படி லிபிய ஒப்பந்ததாரர் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்தியத் தூதரகத்தின் உதவியோடு அனைவரும் தாயகம் திரும்புகின்றனர்.

மீட்கப்பட்டவர்களில் ஒருவரான உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரைச் சேர்ந்த மிதிலேஷ் விஸ்வகர்மா கூறுகையில், எட்டரை மணிநேரம் என்று கூறப்பட்ட வேலை நேரம் நான்கு மாதங்களுக்குப் பிறகு திடீரென இரட்டிப்பாகியது என்றார்.

குறிப்புச் சொற்கள்