புதுடெல்லி: இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட சில அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரியை இந்திய அரசு அறிவித்துள்ளது.
அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தவும் ஏற்றுமதியை ஒழுங்குபடுத்தவும், உள்நாட்டில் உணவு இருப்பை உறுதி செய்யவும் மத்திய நிதித்துறை அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மே 1ஆம் தேதியிலிருந்து புதிய வரி விதிப்பு நடப்புக்கு வருகிறது.
புழுங்கல் அரிசி, புவிசார் குறியீடு என்ற அங்கீகாரம் பெற்ற மற்றும் இதர வகைகளுக்கும், மெருகூட்டப்பட்ட அரிசி, அரைப்பாகம் உடைக்கப்பட்ட அரிசி (குருணை) அல்லது முழுமையாக உடைக்கப்பட்ட அரிசிகளுக்கும் புதிய வரிவிதிப்பு பொருந்தும்.
சுங்க வரிச் சட்டம் 1975ன்கீழ் இரண்டாவது அட்டவணையில் செய்யப்பட்ட திருத்தங்களில் புதிய கட்டண வரி, பல்வேறு வகையான அரிசி வகைகளை ஏற்றுமதி வரி அமைப்பின்கீழ் கொண்டுவருவது உள்ளிட்ட திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
வரி விதிப்பின் மூலம் உள்நாட்டு சந்தையில் விலை ஏற்றத்தை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபரில் 2022 செப்டம்பர் முதல் நடைமுறையில் இருந்த அரிசி ஏற்றுமதிக்கான அனைத்து தடைகளையும் மத்திய அரசு நீக்கியது.
அதே நேரத்தில் குருணை அரிசி ஏற்றுமதி மீதான தடை நீட்டிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்த நிலையில் புழுங்கல் அரிசி மீதான சுங்க வரியை 10 விழுக்காட்டிலிருந்து பூஜ்ஜியமாகக் குறைத்த சில மணி நேரங்களுக்குள், வெள்ளை அரிசிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை (MEP) ரத்து செய்யப்பட்டது.

