சீனாவில் 2027 பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு

சீனாவில் 2027 பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு

1 mins read
212ee764-3cba-4b5c-a6eb-1d36fb16e226
மாநாட்டின் நிறைவுரையில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை நடத்த உள்ள சீன அதிபர் ஸி ஜின்பிங்குக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார். - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை சீனா ஏற்க உள்ளது. 19வது பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு சீனாவில் நடைபெற உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டின் நிறைவு நாளில், அடுத்த ஆண்டிற்கான பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பு சீன அதிபர் ஸி ஜின்பிங்கிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இம்மாநாட்டில் 45 பக்கங்கள் கொண்ட கூட்டுப்பிரகடனம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.

மாநாட்டின் நிறைவுரையில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை நடத்த உள்ள சீன அதிபர் ஸி ஜின்பிங்குக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் செல்வாக்கு உலக அளவில் அதிகரித்து வரும் நிலையில், ‘கிரேட்டர் பிரிக்ஸ்’ திட்டத்தின்கீழ் புதிய உறுப்பு நாடுகளைச் சேர்ப்பதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

ஈரான், எகிப்து, ஐக்கிய அரபுச் சிற்றரசு, இந்தோனீசியா போன்ற நாடுகள் இணைந்ததைத் தொடர்ந்து, மேலும் பல நட்பு நாடுகள் இக்கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.

அதேவேளையில், பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பிரிக்ஸ் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டிருப்பது அனைத்துலக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்