ஹைதராபாத்: தெலுங்கானாவில் அரசுப் பேருந்துகளில் செல்லும் 60 வயதைக் கடந்த ஆண்களுக்கு பயணச்சீட்டில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் ஏற்கெனவே பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் 34 லட்சம் பெண்கள் பயனடைவதாக அம்மாநில அரசு கூறுகிறது.
எனினும், இதற்கான தொகையை போக்குவரத்துக் கழகத்துக்கு மாநில அரசு தாமதமாக வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.
இதனால் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பது, டீசல், பேருந்துப் பராமரிப்புச் செலவு ஆகியவற்றை எதிர்கொள்ள போக்குவரத்துத் துறை திண்டாடி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சாதாரண, விரைவுப் பேருந்துகளில், குளிர்சாதனப் பேருந்துகளில் ஆண்களுக்கு 25% கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்படாது என்றும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.