புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் இடம்பெற்றுள்ள மக்கள் பிரதிநிதிகளில் 30 விழுக்காட்டினர் குற்ற வழக்குகளில் தொடர்புள்ளவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
எம்பி, எம்எல்ஏக்களின் தகுதி, அரசியல் செயல்பாடுகள், சேவைகள் குறித்து அண்மைய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
அதில், 31% எம்பிக்கள், 29% எம்எல்ஏக்களுக்கு குற்ற வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களில் 14 விழுக்காட்டினர் மட்டுமே குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களாக இருந்தனர்.
தற்போது இந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துவிட்டது. இதேபோல், நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான புகார்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இந்திய மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 1,200க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் பலருக்கு குற்றப் பின்னணி இருப்பது தற்போது உறுதியாகி உள்ளது.
ஆக அதிகமாக, ஆந்திர மாநில எம்எல்ஏக்களில் 56% பேர் குற்றப் பின்னணி கொண்டவர்களாக உள்ளனர்.
தெலுங்கானாவில் 50% எம்எல்ஏக்கள் மீது கொலை, கொள்ளை, கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்களில் 61% பேரும் தெலுங்கு தேசம் கட்சியில் 61% எம்எல்ஏக்களும் குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.
தெலுங்கானா மாநில எம்பிக்களில் 71% பேர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பீகார் எம்பிக்களில் 41% பேர் குற்ற வழக்குகளுடன் தொடர்புள்ளவர்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.