சென்னை: திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாட்டில் மூவாயிரமாவது குடமுழுக்கு நாகை மாவட்டம் திருப்புகழூரில் நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலில் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு மே 19ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கி வைத்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்று இதுவரை 2,956 கோயில்களில் குடமுழுக்கு நடந்திருக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தொடர்ச்சியாக குடமுழுக்கு நடத்தப்பட்டு வருகிறது.
“நாகை மாவட்டம் திருப்புகழூரில் ஜூன் 5ஆம் தேதி மூவாயிரமாவது குடமுழுக்கு நடைபெற உள்ளது.
“திருக்கோயில் இடங்களை அளவிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
“இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 7,560 ஏக்கர் நிலங்களை மீட்டுள்ளோம். இதன் மதிப்பு 7,671.23 கோடி.
“மாநில வல்லுநர் குழுவில் இதுவரை 12,104 கோயில்களுக்கு அனுமதி அளித்திருக்கிறோம்,” என்று தெரிவித்தார்.