தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய 4.55 மில்லியன் பக்தர்கள்

1 mins read
e633371d-f9f1-455c-9014-bb24a4ea1075
செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 4.55 மில்லியன் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். பக்தர்கள் புனித நீராடும் காட்சி உயரத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. - படம்: ஏஎன்ஐ

பிரயாக்ராஜ் (உத்தரப்பிரதேசம்): கணிசமான அளவில் பக்தர்களைப் பிரயாக்ராஜ் நகருக்கு மகா கும்பமேளா விழா ஈர்த்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 4.55 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக உத்தரப் பிரதேச தகவல் துறை தெரிவித்தது.

ஜனவரி 13ஆம் தேதியன்று இந்நிகழ்வு தொடங்கியது முதல் 147.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கங்கை மற்றும் யமுனை நதிகளின் சங்கமத்தில் நீராடியுள்ளதாகவும் உ.பி. தகவல் துறை மேலும் தெரிவித்துள்ளது.

இதுவரை, ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்கள் மகா கும்பம் விழாவுக்குச் சென்று திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திங்கட்கிழமை புனித நீராடினார். அவருடன் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், பாபா ராம் தேவ் மற்றும் பிற துறவிகள், முனிவர்களும் இருந்தனர்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா விழா பிரயாக்ராஜில் ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. இந்நிகழ்வு பிப்ரவரி 26 ஆம் தேதி வரை தொடரும்.

மகா கும்பமேளா விழா 45 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்