கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் மல்லிகார்ஜுன மலைக்கும் ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்கும் அருகே கிட்டத்தட்ட 4,000 ஆண்டு பழைமை வாய்ந்த தொல்பொருள்கள் கண்டுடிக்கப்பட்டன.
அசோக மாமன்னர் காலத்து எழுத்துகள் பொறிக்கப்பட்ட சின்னம் கண்டுபிடிக்கப்பட்ட அந்த இடம், மீண்டும் அகழாய்வு கண்டுபிடிப்புகளுக்காகப் பிரபலம் அடைந்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20க்கும் அதிகமான ஆய்வாளர்கள் இந்த அகழாய்வில் ஈடுபட்டுள்ளனர்.
கிறிஸ்து பிறப்பதற்கு முன், 11ஆம் நூற்றாண்டுக்கும் 14ஆம் நூற்றாண்டுக்கும் இடையே மனிதர்கள் சமூகமாய் அங்கு வாழ்ந்திருக்கக் கூடும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
களிமண் பானை, கலைப் பொருள்கள், கருவிகள், சமையல் கரணங்கள் உள்ளிட்டவை மீட்டெடுக்கப்பட்டன. பரிணமித்துவரும் பண்பாட்டு வழக்கங்களைக் கொண்ட மேம்பட்ட சமூகத்தை இவை குறிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ எம். பாவர், கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பீட்டர் ஜி. ஜோஹென்சன், ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அகழாய்வுக்கு முன்னதாக, ஆர்வத்திற்குரிய 271 இடங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.