மும்பை: இண்டிகோ நிறுவனத்தின் பல விமானச் சேவைகள் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் தவிப்புக்கு ஆளாகினர்.
முக்கிய விமான நிலையங்களான டெல்லி, வாரணாசி, புனே, சண்டிகர், அமிர்தசரஸ், இந்தூர், பாட்னாவில் இயக்கப்படும் 50 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்தது.
எனினும் என்ன காரணம் என்பதைத் தெரிவிக்கவில்லை.

