போதைப்பொருள் தடுப்புச் சோதனை: ஜம்மு - காஷ்மீரில் 500 பேர் கைது

போதைப்பொருள் தடுப்புச் சோதனை: ஜம்மு - காஷ்மீரில் 500 பேர் கைது

1 mins read
3dfe059b-67b1-4752-92d2-fc972a33db49
537 கடத்தல்காரர்கள் மீது 502 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். - இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

ஸ்ரீநகர்: போதைப்பொருள் தடுப்புச் சோதனையின்போது ஜம்மு-காஷ்மீரில் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஷ்மீரில் வன்முறைச் சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க உள்ளூர் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், ‘போதைப் பொருள் இல்லாத ஜம்மு-காஷ்மீர் அபியான்’ என்ற திட்டம் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கப்பட்டது. இது போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கிய திட்டமாகும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தச் சோதனை நடவடிக்கைகளின் மூலம் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீரில் ரூ.12.66 லட்சம் மதிப்பிலான ஆறு அசையும் சொத்துகளும் ரூ.7.77 கோடி மதிப்பிலான 14 அசையா சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

ஜம்மு மண்டலத்தில் ரூ.1.36 கோடி மதிப்பிலான 22 அசையும் சொத்துகளும் ரூ.5.54 கோடி மதிப்பிலான 9 அசையா சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 537 கடத்தல்காரர்கள்மீது 502 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்