தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்

1 mins read
e1f82a95-b344-46a8-9914-fac5dccd461a
சென்னை தலைமைச் செயலகத்தில் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. - படம்: ஊடகம்

சென்னை: கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் கட்டுவதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார்.

அந்த நிகழ்வு வியாழக்கிழமை (மே 29) காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

பொதுப்பணித் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்குக் கடற்கரைச் சாலையில் 37.99 ஏக்கர் நிலப்பரப்பில், உலகத்தரம் வாய்ந்த அந்த மையம் கட்டப்படுகிறது.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா தொடர்பில் 2023 ஜூன் 2ஆம் தேதி நடைபெற்ற விழா ஒன்றில், கலைஞர் பெயரால் சென்னையில் புதிய உலகத் தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார் அறிவித்தார்.

10,000 நபர்கள் அமரக்கூடிய அளவில் 91,024 சதுர அடி பரப்பளவில் பொருட்காட்சி அரங்கம், 5,000 நபர்கள் அமரக்கூடிய அளவில் 50,633 சதுர அடி பரப்பளவில் மாநாட்டு மண்டபம், 1,500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 512,800 சதுர அடி மொத்த பரப்பளவில் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் கட்டப்படவுள்ளது.

அந்தக் கட்டடம் முழுவதும் குளிரூட்டும் வசதி அமைக்கப்படுகிறது. மின் ஆக்கி வசதி, மின்தூக்கி வசதி, 1,638 சீருந்துகள் மற்றும் 1,700 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் அதில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்