தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

716 கி.மீ. தூர நீர்வழிப் போக்குவரத்து, நீர்வழிச் சுற்றுலாவை மேம்படுத்த தயாராகும் உ.பி.

1 mins read
51fa5cb4-3343-494f-bb60-380bd9d95569
உத்தரப் பிரதேசத்தில் கங்கை, யமுனை உட்பட 11 தேசிய நீர்வழிகள் உள்ளன. இவை அம்மாநிலத்தை மற்ற மாநிலங்களுடன் இணைக்கின்றன. - கோப்புப்படம்: ஊடகம்

லக்னோ: முக்கியமான 6 ஆறுகளில் 761 கிலோமீட்டர் தொலைவுக்கு நீர்வழிப் பாதையை அமைக்க உத்தரப் பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக 11 ஆறுகளின் படித்துறைகளில் தளங்கள் மற்றும் பிற ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும் இத்திட்டத்தை அமல்படுத்த உள்நாட்டு நீர்வழி ஆணையத்தை அம்மாநில அரசு உருவாக்கி உள்ளது என்றும் இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

புதிய திட்டத்தைச் செயல்படுத்த பொதுப்பணி, சுற்றுலா, கலாசாரம், நீர்ப்பாசனம், நீர்வளம், வனம், சுற்றுச்சூழல் துறைகளைச் சேர்ந்த பொறியாளர்கள் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.

இதன் மூலம் மாநிலத்தில் நீர்வழி போக்குவரத்து, நீர்வழி சுற்றுலாவை மேம்படுத்த இயலும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் கங்கை, யமுனை உட்பட 11 தேசிய நீர்வழிகள் உள்ளன. இவை அம்மாநிலத்தை மற்ற மாநிலங்களுடன் இணைக்கின்றன.

இந்த நீர்வழிகள் தவிர, மேலும் பல ஆறுகளிலும் நீர் சுற்றுலாவின் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.

ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரயாக்ராஜில் இருந்து கோல்கத்தாவுக்கு சிறிய கப்பல்கள் மூலம் சிமென்ட் மூட்டைகள் அனுப்பப்பட்டன.

பின்னர் நீர்மட்டம் குறைவாக இருந்ததால் கப்பல் போக்குவரத்தை அப்போதைய அரசு நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்