தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பள்ளத்தில் விழுந்த வாகனம், எண்மர் மரணம், அறுவர் காயம்

1 mins read
6fcb29e3-6c7c-4cc2-bc3a-6caeb204f7f6
கிட்டத்தட்ட 300 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்த வாகனம். - படம்: இந்திய ஊடகம்

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் கேர்ஸ் மாவட்டமான பித்தோராகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) வாகனம் ஒன்று 300 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், இரு குழந்தைகள் உள்பட எட்டுப் பேர் உயிரிழந்தனர், அறுவர் காயமடைந்தனர்.

“14 பேரை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று முவானி கிராமத்தில் சுனி பாலம் அருகே விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். உடனடியாக அந்த இடத்தை அடைந்த காவல்துறையினர் நிவாரணம், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்,” என்று பித்தோராகர் காவல்துறையின் ரேகா யாதவ் கூறினார்.

உள்ளூர் கிராம மக்கள் மீட்பு நடவடிக்கையில் உதவினர். காயமடைந்தவர்கள் பள்ளத்தாக்கிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

பித்தோராகர் சாலை விபத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த இந்தியப் பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ. 50,000மும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்