ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்குரூ.8,000 கோடி தேவை: தேர்தல் ஆணையம்

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்குரூ.8,000 கோடி தேவை: தேர்தல் ஆணையம்

2 mins read
42994824-8b6f-4950-9781-2fbb81026589
2029க்குள் நாடு முழுவதும் வாக்குப் பதிவு மையங்களின் எண்ணிக்கை 13.6 லட்சமாக அதிகரிக்க வேண்டும். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பெயரில் நாடாளுமன்ற மக்களவை மற்றும்அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து ஆராய முன்னாள் துணை அதிபர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப் பட்டது.

அக்குழு கடந்த மார்ச் மாதம் சமர்ப்பித்த அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த 18ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது.

இந்நிலையில் இது தொடர்பான மசோதா வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்த திட்டத்தை அமல்படுத்த அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வது சவாலான காரியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் வாக்காளர் பட்டியல் முதல் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களை வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைப்பது வரையிலான தளவாட சிக்கலையும் அரசு எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இது தொடர்பாக ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவிடம் தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி மாதம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அதில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த போதிய அவகாசம் தேவை. வரும் 2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த ரூ.7,951 கோடி தேவைப்படும். மேலும் வரும் 2029க்குள் நாடு முழுவதும் உள்ள வாக்குப் பதிவு மையங்களின் எண்ணிக்கையை 13.6 லட்சமாக அதிகரிக்க வேண்டும். 53.8 லட்சம் வாக்கு இயந்திரங்களும் (பியு) 38.7 லட்சம் கட்டுப்பாட்டு இயந்திரங்களும் (சியு) 41.6 லட்சம் விவிபாட் கருவிகளும் தேவைப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்