கைவிடப்பட்ட பாலியல் வன்கொடுமை விசாரணை

1 mins read
57a9f527-374d-42b1-93df-95e87b37b88d
கேரள உயர் நீதிமன்றம். - கோப்புப்படம்: ஊடகம்

திருவனந்தபுரம்: மலையாளத் திரையுலகைச் சேர்ந்த நடிகைகள் பலர் பாலியல் வன்கொடுமையை எதிர்கொண்டது தொடர்பாக, விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக் குழு, தனது பணியைக் கைவிடுவதாகத் தெரிவித்துள்ளது.

மலையாளத் திரையுலகில் பணியாற்றும் பெண் கலைஞர்கள் பல்வேறு பாலியல் தொல்லைகள், பிரச்சினைகளை எதிர்கொள்வதாக எழுந்த புகார்கள் குறித்து விசாரிக்க நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையம் ஒன்றை கேரள அரசு நியமித்தது. அக்குழு தனது அறிக்கையை 2019ம் ஆண்டு டிசம்பரில் சமர்ப்பித்தது.

அந்த அறிக்கை குறித்து ஆய்வு செய்ய பின்னர் சிறப்பு விசாரணைக் குழுவும் கேரள உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டது.

இந்நிலையில் நீதிபதி ஹேமா தலைமையிலான விசாரணை ஆணையம் பரிந்துரைத்த 35 வழக்குகளிலும் எந்தவித மேல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாது என்று சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்தது.

புகார் அளித்தவர்கள் அதுகுறித்து ஆர்வம் காட்டாததுதான் இதற்குக் காரணம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்