கள்ள நோட்டில் காந்திக்குப் பதில் இந்தி நடிகர்

1 mins read
a8808bf2-d764-4f1c-8caf-0f775472756d
500 ரூபாய் கள்ள நோட்டில் இந்தி நடிகர் அனுபம் கெர் (வலம்) படம் இடம்பெற்றுள்ளது. - படம்: என்டிடிவி

மும்பை: இந்தி நடிகர் அனுபம் கெர், இந்தியத் திரைப்படத் துறைக்கு ஒரு சொத்து என்று சொன்னால் அது மிகையில்லை.

ஆனால், மோசடிக்காரர்கள் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருப்பது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

500 ரூபாய் கள்ள நோட்டுகளில் நடிகர் அனுபம் கெரின் படத்தை அவர்கள் அச்சிட்டுள்ளனர்.

அவற்றின் மொத்த மதிப்பு 1.6 கோடி ரூபாய்.

அகமதாபாத்தில் தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்களை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவரிடம் ஆடவர் இருவர் அந்த நோட்டுகளைத் தந்தபோது இது வெளிச்சத்துக்கு வந்தது.

ஆடவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

கள்ள நோட்டுகளில் ‘ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா’ என்பதற்குப் பதில் ‘ரீசோல் பேங்க் ஆஃப் இந்தியா’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கள்ள நோட்டின் படம் இணையத்தில் பரவிய வேளையில் பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

அதைப் பார்த்த நடிகர் அனுபம் கெர், “500 ரூபாய் நோட்டில் காந்தியின் படத்துக்குப் பதில் என் படமா???? எதுவும் நடக்கும்,” என்று வியப்பு தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்