தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இல்லாத இடத்திற்கு விளம்பரம் செய்து சிக்கலில் மாட்டிய நடிகர் மகேஷ்பாபு

1 mins read
6853618b-f275-4a5c-a035-e82ba1c29ee1
நிலமோசடி வழக்கிய சிக்கிய தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு. - படம்: ஊடகம்

தெலுங்கானா: தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் இல்லாத ஓர் இடத்தின் பெயரைச் சொல்லி விளம்பரம் செய்ததில் மருத்துவர் ஒருவர் நஷ்டமடைந்து இருப்பதாக புகார் அளித்ததன் பேரில் தற்பொழுது நில மோசடி வழக்கில் சிக்கியுள்ளார்.

சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா குழுமத்தின் பிராண்ட் அம்பாஸ்டராக மகேஷ் பாபு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மகேஷ் பாபு பணம், காசோலை மூலமாக ரூ.5.9 கோடிகள் பெற்றதாக கூறப்படுகிறது.

இதில் பணம் மட்டுமல்லாமல், சட்ட விரோதமாக வேறு ஏதேனும் பொருள் அல்லது அசையும், அசையா சொத்தும் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது.

மேலும், சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா குழுமத்தின் ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடித்த மகேஷ்பாபு, அதில் அவர் பயன்படுத்திய பெயர்களில் இல்லாத ஓர் இடத்தின் பெயரையும் சொல்லியுள்ளார். அதுதான் தற்போதைய பிரச்சினைக்கு காரணம்.

மருத்துவர் ஒருவர் அளித்த புகாரில், நடிகரை நம்பி முதலீடு செய்ததில் ரூ.34.8 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது என குறிப்பிட்டு ரங்காரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் புகாரளித்துள்ளார்.

அதன்பேரில், மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம், விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளது. விரைவில் விசாரணைக்கு முன்னிலையாகலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்