புதுடெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூன்று இருமல் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ‘கோல்டிரிஃப்’ எனும் இருமல் மருந்தை மத்தியப் பிரதேசத்தில் பயன்படுத்திய பிள்ளைகளில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உலகச் சுகாதார நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த மூன்று மருந்துகள் ஏதேனும் நாடுகளில் இருப்பது கண்டறிப்பட்டால், அதுகுறித்த தகவலை உடனடியாகத் தெரிவிக்குமாறு உலகச் சுகாதார நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதுபோன்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படவோ அல்லது விநியோகிக்கப்படவோ கூடாது என்றும் பொதுவாக ஐந்து வயதுக்குட்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை என்றும் அது கூறியுள்ளது.
இருமல் மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இந்திய அரசு வலியுறுத்துள்ளது.