சவூதிக்கான ஏர் இந்தியா விமானங்கள் நவம்பர் 7 வரை ரத்து

சவூதிக்கான ஏர் இந்தியா விமானங்கள் நவம்பர் 7 வரை ரத்து

கோப்புப் படம்: ஸ்கைடிரேக்ஸ்

25 Oct 2026 - 5:15 pm

1 mins read

புதுடெல்லி: ரியாத், தம்மாம் நகரங்களுக்கான தனது சேவைகளை நவம்பர் 7ஆம் தேதி வரையிலும், ஜெட்டாவுக்கான விமானங்களை அக்டோபர் 31ஆம் தேதி வரையிலும் இடைநிறுத்தம் செய்வதாக ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

மத்திய கிழக்கு வட்டாரத்தில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை, விமான நிலையங்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக இந்தியா, சவூதி அரேபியாவுக்கு இடையிலான பல விமானச் சேவைகளை இந்திய விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன.

இதேபோல், இண்டிகோ நிறுவனம் ஜெட்டா, தம்மாம், மதினாவுக்கான சேவைகளை அக்டோபர் 31 வரை ரத்து செய்துள்ளது.

ஆகாசா ஏர் நிறுவனம் ரியாத்துக்கான விமானங்களை நவம்பர் 30 வரையிலும் ஜெட்டாவுக்கான சேவைகளை நவம்பர் 10 வரையிலும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

வட்டாரப் பாதுகாப்புச் சூழலைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்நடவடிக்கை காரணமாக சவூதி அரேபியாவிற்குப் புலம்பெயர்ந்த இந்தியர்களும் சுற்றுலாப் பயணிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்